உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 28.pdf/84

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஈரோடு வேலா (வரலாறு)

71

"பதினைந்து நூற்றாண்டுகளுக்கு முன்னர் உலகிலேயே மூளைச் சலவைக்கு ஆட்பட்ட மக்கள் யாரெனில் நம் இந்திய மக்கள் தாம். அவர்களை அந்த நிலைக்கு ஆளாக்கியவர்கள் யாரெனில் கல்வி அறிவும், மதிநுட்பமும் பெற்ற நம்மவர்களே. அவர்கள் மற்றவர்களுக்கு வழி காட்டியாக அமையாததுடன், அவர்களை என்றும் அடக்கியாள 'வருணாசிரமம்' என்னும் மூளைச் சலவை முறையைக் கையாண்டனர். அதனின்று மீள முயன்ற வரலாறுகளில் முகிழ்த்தவர்கள் தாம் வடபுலத்து மகா வீரர், புத்தர், குருநானக், தபீர்தாசர்; விவேகானந்தர் ஆகியோரும், தென்புலத்துத் திருமூலர். பதிணெண் சித்தர்கள், கபிலர், சர்வக்ஞ பசவர், வேமண்ணர், நாராயண குரு, வள்ளலார் ஆகியோரும் ஆவர்,

ஆனால்,

வர்கள் அனைவரும் வருணாசிரமத்தை எதிர்த்தும் கூடத் தம் கொள்கைகளை நிலை பேறுடைய வையாக ஆக்கவில்லை. நமது பகுத்தறிவுத் தந்தை பெரியாரின் கொள்கையை அன்று ஏற்றுக்கொண்ட இலட்சக்கணக்கான தொண்டர்களில் இன்று ஆயிரக்கணக்கில் கூட எஞ்சி நிற்க முடிய வில்லையே! ஏன்?

அவரது அடியொற்றிப் பின் பிரிந்தவர்கள், வழி தெரியாமல் ன்று வருணாசிரமத்தின் சாயலில் ஓய்ந்திருப்பதைப் பார்க் கிறோம் அல்லவா! வள்ளலாரின் நெறிகளைப் பரப்புபவர்களே வருணாசிரம ஒலிகளை எழுப்பி வேள்விகளை நடத்தும் வேடிக்கை அல்லவா இன்று நிகழ்கிறது!

ஏன் இந்நிலை? இவர்கள் கொண்ட கொள்கைகளில் தவறில்லை. ஆனா, க் கொள்கைகளுக்குத் தக்க மூலங்களைத் தேடினாரில்லை. அக்கொள்கைகளின் மூலமாகத் திருக்குறள் இருந்தும் அம்மூலத்தைச் சரிவரப் பற்றினாரில்லை.

"இதோ...என்னுடைய இந்தத் தலைமுறையில்தான் மூளைச் சலவையின் வேகம் குறைந்துள்ளது, இதுவே மூலத்தை உணரச் சரியான நேரம்." என்று என் உள்மனம் சுட்டிக் காட்டியது என்கிறார் வேலா.

"விவிலியம் பிறந்தது; அந்நெறி விரைந்து வளரவில்லை; பிறகு அரசின் சமயம் ஆயிற்று! உலகம் முழுவதும் பரவிற்று.