உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 28.pdf/85

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

72

இளங்குமரனார் தமிழ்வளம் - 28

புத்தகக் கொள்கைகளை ஏற்றவர்கள் மிகச் சிலரே; பேரரசன் அசோகன் அதனை ஆட்சி மதம் ஆக்கினான். பல நாடு களில் பரவியது.

"கன்பூசியசின் கருத்துக்கள் தொடக்கத்தில் வெறும் குமுகாயக் கருத்துக்களாகவே இருந்தன; பின் சீன அரசு அவற்றைத் தழுவியது; நாடெல்லாம் பரவிற்று; ஒரு மதமாகப் பதினைந்து நூற்றாண்டுகள் நிலைத்து நின்றது."

தமிழகத்தின் சமணத் தாக்குதல் அரச குலத்தில் இருந்து விரவிப் பரவிற்று. சோழப் பேரரசு காலத்தில் சைவம் கோலோச் சியது; கிருட்டிண தேவராயர் தழுவலால் வைணவம் வெற்றி நடையிட்டது.

உருசிய அரசின் ஆட்சி அமைப்பிற்கு மார்க்கசியக் கொள்கைகள் வழி வகுத்தன. ஆனால் உருசிய அரசு இன்றேல் மார்க்கசியம் இன்றிருக்காது! நூலகத்தில்தான் இருந்திருக்கும்.

கோனாட்சிகளிலும் குடியாட்சிகளிலும் திருக்குறள் அரியணையில் அமர்த்தப்படவில்லை. அரசுகளின் கண்ணோட் டத்தைப் பெறவும்இல்லை.

-

என்று உலகளாவிய சமயங்களின் பரவுதலை ஆயும் வேலா, "உலகின் மற்ற மக்களெல்லாம்விலங்குகளாய்த் திரிந்த காலை... மெய்யுணர்வை அறிய அக அமைவைக் கண்டறிந்த முத்த முதல்வரான என் முந்தையர்க்கும் முந்தையரை நினைந்து நாளும் நான் மேற்கொள்ளும் அக அமைவால் பெற்ற உறுதியுடன் குறளியம் பிறந்துள்ளது" என நிறைக்கிறார்.

தொடக்கக் குறளிய முன்னுரையிலே “தமிழகத்தின் வாழ்வு இயக்கமாக் குறளியம் இடம் பெற்றாக வேண்டும். தமிழகத்தின் வாழ்வியலாகக் குறளியம் இடம்பெறும் பொழுது தான் சாதி வேற்றுமைகள் நீங்கும். வாழ்க்கை வாய்ப்புகள் அனைவருக்கும் கிடைக்கும். மனித உலகத்தின் முன்னேற்றத்திற்குத் தடைக்கல்லாக இருக்கும் வைதீகக் கொள்கைகள் நீங்கும்."

நாளையும் கோளையும் வழிபடும் மூட பழக்கங்கள் தாலையும், மருட்டுகின்ற மத தலைவர்களின் கொட்டம் ஒடுங்கும். பொய்யும் கற்பனையும் போயகலும்! வாய்மை வந்த டையும்" என்று கூறும் தவத்திரு அடிகளார், "தமிழினம் தனது தனித் தன்மையைப் பாதுகாத்துக் கொள்ளவும் உலகம் தழுவி