உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 28.pdf/86

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஈரோடு வேலா (வரலாறு)

73

வாழ்வும் அதன் வாழ்வியல் வரிச் சட்டமாகக் குறளியமே இடம் பெறவேண்டும். இந்த நோக்கம் நிறைவேறுமானால், குறளியம் வெற்றிபெற்றதாக அமையுமென வெற்றிவழி இன்னதெனச் சுட்டுகிறார்.

அமெரிக்க நாட்டிலே ஒரு பெருமகனார் சான்னி என்பார்; அவர் எங்குச் சென்றாலும் ஆப்பிள் விதையோடு செல்வார். காண்பார் அனைவர்க்கும் ஆப்பிள் விதையைத் தருவார்; தாமே நட்டும் செல்வார்; அவரை அந்நாள் வாழ்த்தியவர் உண்டு; வசை கூறியவர்களும் உண்டு. ஆனால், இந்நாள் அவர் ‘ஆப்பிள் சான்னி' யாகத் திகழ்கிறார் "குறளியம் -அப்படி ஓர் இயம் இயலுமா? கவலற்க! நாம் இன்று நாடெல்லாம் தூவி நடும் விதைகளோ பயனுடைய வள்ளுவப் பெருமான் வழங்கிய - உதவிய குறளிய விதைதான்! அவை கண்டிதமாக ஒரு நாள் பூத்துக் குலுங்கிக் கனிகளாய்த் தொங்கும்.

-

-

நம்நாட்டினர் மட்டுமல்லர். உலகினரெல்லாரும் துய்த்து மகிழ்வர்; இஃது உறுதி" என்பது வேலாவின் மூன்றாம் இதழ் ஆசிரிய உரை. எத்துணை உறுதி! நம்பிக்கை!

திருக்குறள் பேரவை, குறளியம், குறளாயம்,தமிழ் வழிக் கல்வி என்பன தனித்தனி ஆய்வு விளக்கப் பகுதிகளாக வருமாகலின் குறளியச் செய்தி இவ்வளவில் இவண் அமைகின்றது.

வேலாவின் பொதுப்பணி தம் தொழிற்பணிக்குத் தடையாக அமைந்ததில்லை. பொதுப்பணியால் தம் தொழிற் பணி சிறக்கவும், தொழிற்பணியால் பொதுப்பணி சிறக்கவும் ஒன்று ஒன்றற்குச் சிறப்பாகவும் துணையாகவும் அமைந்தன. ஆகலின், வணிகமும் தொழிலும் வளர வளரப் பொதுப்பணியும் வளர்ந்து பெருகலாயிற்று.

வெளிச் செலவு

வேலா அண்டை மாநிலங்கள் அல்லாமல் இந்தியத் துணைக்கண்டம் முழுமையும் சென்றுள்ளார். ஈழநாட்டிற்கும் சென்றுள்ளார். ஈழ நாட்டிற்குச் சென்றிருந்தபோது அந்நாட்டு வானொலி நிலையத்தில் குறளாயம் குறித்த நேர்காணல் நிகழ்ந்து, அஞ்சல் செய்யப்பட்டது. ஈழகேசரி முதலிய இதழ் களிலும் செய்திகள் வந்தன. கோவை வானொலியில் குறள், குறளாயம் குறித்துப் பல்கால் உரையாற்றியுள்ளார். சென்னைத்