உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 28.pdf/87

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

74

இளங்குமரனார் தமிழ்வளம் - 28

தொலைக்காட்சியில் குறளாய நேர் காணல் நிகழ்ச்சி இடம் பெற்றது. கேரள மாநிலத்துத் தட்டாம்படி சென்று திருவள்ளுவர் ஞானபீட நடைமுறைகளைக் கண்டு மகிழ்ந்ததுடன் அதன் நிறுவனர் சிவானந்தருடன் உரையாடி இன்புற்றார். பின்னர் அவரைக் குறளாயச் சார்பில் ஈரோட்டுக்கு அழைத்துச் சிறப்புச் செய்தார்.

சிறப்புப் பணியில் பொதுப்பணி

தந்தையார் காலத்தே சிற்றாறாக இருந்த நிறுவனம் பேராறாகச் சிறந்தது. அவர் காலத்தில் வெளியே அச்சகம் நாடிச் செல்ல வேண்டியிருந்த இடர், இல்லையாய் வேலா அச்சகம் உருவாயிற்று! அச்சகத்தின் ஒரு பகுதிதானே அட்டை கட்டுதல்! ஆகவே, நினைக்குமாறெல்லாம் அச்சிடவும் அட்டை கட்டவும் ஏந்துகள் வாய்ந்தன. திங்கள் காட்டி, நாள் காட்டியாகவும் அக்காட்டிகளும் பலவாகவும் விளங்கின. தாம் உயிர்க் கொள்கை யாகக் கொண்ட குறளியப் பரவுதலுக்கு நாள்காட்டியும் திங்கள் காட்டியும் குறிப்பேடுகளும் விளம்பரக் களங்களாயின. ஒவ்வொன்றிலும் திருக்குறள் மணி மணியாய் விளக்கமுற்றன.

1.

கற்றவர்முன் கற்காதவர்

பேசாது

இருத்தல்

நன்று

தீயநட்பை விடுக

2.

பழியற்ற

செல்வம்

சேர்க்க

தீமைகண்டு அஞ்சாதே

3.

அரிய

செயல்களைச்

செய்பவர்

பெரியார்

பயனில் பேசாதே

4.

திருட்டுச்

சொத்து தீங்கு செய்யும்

காமம் உயிரின்பம்