உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 28.pdf/88

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5.

தூய்மை துணிவு

வாய்மை

நினைவு

ஈரோடு வேலா (வரலாறு)

75

6.

இன்சொல் இனிது

வன்சொல்

கொடிது

7.

ஊக்கம்

இல்லைஎனில் செல்வம்

சினமில்லாரே துறவி

ஒழுக்கம் நல்லோரைத் தரும்

நீங்கி விடும்

தெளிவில்லாததைத் தவிர்

8.

கண்

கருத்தொத்த

காதலர்

வாழ்க

சொல்திறன் மதிப்புறும்

9.

அன்பு பண்பு

தரும்; அறம்

பயன் தரும்

ஆசையற்று நிலைபெறு

10.

சினத்தை

உடையவர்

நலத்தை

யடையார்

நினைவு வெற்றி தரும்

இப்பத்துத் தொடர்களும், சிறு தொடர்களும் எந்நூற் செய்தி! திருக்குறள் பிழிவுச் செய்தி அல்லவோ! இவை நூலில் இடம் பெற்றவையா? நூலில் இடம்பெறுதல் வழக்குத்தானே! ஆங்கும் இப்படி நறுக்குத் தெறித்தாற்போல் இடம் பெறுவ தில்லையே! பின் எங்கே இடம் பெற்றவை! இவை, வேலா வெளியிடும் காவிரி நாள்காட்டியில் இவ்வாண்டு (1990) ஏப்பிரல் முதல் நாள் முதல் பத்தாம் நாள் முடியும் அளவும் உள்ள இதழ்களில் பெரிதும் சிறிதும், இதழுக்கு ஒவ்வொன்றாய் மேலும் கீழும் தனித்தனி இடம் பெற்றவை. ஒவ்வொரு நாளும் இரண்டு குறள்களின் பிழிவை வாங்கிக் கொள்ளும் உத்தியைக் கொண்டு திட்டமிட்டு அமைக்கப்பட்டவை.