உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 28.pdf/89

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

76

இளங்குமரனார் தமிழ்வளம் - 28

குறளியம் திங்கள் காட்டி கி.பி.1990 சனவரி 'உச்சி' என்ன சொல்கிறது: "அறநெறிப்படி உலகில் வாழ்பவன் தெய்வமாக மதிக்கப்படுவான்" என்கிறது.

இதோ ஒரு விளம்பரம் பாருங்கள்

திருக்குறளை ஓதித் தெய்வம் தொழுவோம்

திருக்குறளை ஓதித் திருமணம் செய்வோம்

திருக்குறளை ஓதிப் புதுமனை புகுவோம்

திருக்குறளை ஓதிக் கல்வி கற்போம்

திருக்குறளை ஓதித் தொழில் தொடங்குவோம்

திருக்குறளை ஓதிப் பொருள் செய்வோம்

திருக்குறளை ஓதி நீத்தார்கடன் நிகழ்த்துவோம்

திருக்குறளை ஓதி எல்லோரும் எல்லாம் பெறுவோம் திருக்குறளை ஓதி

இது விளம்பரச் செய்தியா? வாழ்ந்து விளக்கமுறக் கூறும் செய்தியா? வாழ்வியல் விளங்கக் கூறும் செய்திதானே இது திருக்குறளை ஓதி இது,பிறர்க்குக் கூறி அமைவதா? தாமும் கொள்வதா? தம் நடைமுறைக்குக் கொண்டு வந்து நலம் பெற்ற பட்டறிவால் நாடும் நானிலமும் அதனைப் பெற வேண்டும் என்னும் நயனார்ந்த நெஞ்சில் இருந்து புறப்பட்டதே என்பதை வேலாவுடன் தொடர்புடையவர் எவரும் அறிவர்; "யாம் பெற்ற பேறு பெறுக வையகம்" என்பதன் முழக்கமே இச்செய்தி. ஒரு வேண்டுகோள்

இந்த நாள் காட்டியில் புதுமைகளைப் பார்த்தீர்கள். இவை தவிர ஏதேனும் குறிப்புகள் இருக்க வேண்டும் என்று நீங்கள் கருதினால் எங்களுக்கு எழுதுங்கள்.

-

இவ்வேண்டுகோள் செய்தியால் விளங்குவது என்ன?

"வேலா நிறுவனம் வளரும் நிறுவனம்;

வளர்க்க விரும்பும் நிறுவனமுமாம்" என்பதன்றோ!

கிழமையில் புதனும் சனியும் தமிழ்ச் சொற்கள் இல்லை; அச்சொற்கள் வேலா நாள் காட்டிகளில் எப்படி இடம் பெறும்?