உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 28.pdf/90

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஈரோடு வேலா (வரலாறு)

77

அறிவன், காரி என இடம் பெறும். பாவாணர் சுட்டிய சொற்கள்

வை.

1990 ஆம் ஆண்டு திங்கள் காட்டி என்ன சொல்கின்றது? 'திருக்குறள் நம்மறை - நெறி' என்கிறது.

"அறவோரே அந்தணர்; இவரோடு சேர்வதே நம் வாழ்வுக்கு வெற்றி" என்கிறது சனவரி.

அதன் நாள் வெற்றிடங்கள் நான்கு. அவை என்ன சொல்கின்றன; சான்றோரின் சொற்களே அழியாத மந்திரச் சொற்கள் (கு.27).

யான் எனது என்ற செருக்கை விடுபவரே வானோரினும் உயர்ந்தவர் (கு.346)

இறப்பு வருமுன் நல்ல செயல்களை விரைவு செய் (கு.335) பேரா இயற்கைபெற ஆரா இயற்கை அவா நீக்குக (கு 370). கு. என்பது என்ன? திருக்குறள். எண், அளளெண். அப்பாடலின் திரண்ட கருத்து இது.

-

தாளின் கீழ்வரி ஒரு முகவரி, தூய அறிவினைப் பின்பற்று; இன்றேல் கற்றும் பயனில்லை

இவ்வேறுபாடு என்ன?

குறள், நாள்காட்டி திங்கள் காட்டிக்காக.

திங்கள் காட்டி, நாள் காட்டி குறளுக்காக - இன்னும் ஒரு வகையால் குறளுக்கு வணிகமா? வணிகத்திற்காகக் குறளா? ஒன்றை ஒன்று பிரிக்க முடியாத ஒன்றை என்ன செய்யலாம்! வள்ளுவர் சொற்படி,

'வாணிகம் செய்வார்க்கு வாணிகம்'

எனலாம்.

இவற்றுக்கு முன் வழிகாட்டி உண்டே உண்டே! அவர் கழக ஆட்சியாளர் தாமரை செல்வர் வ. சுப்பையா அவர்கள். திருக்குறள் நாள்காட்டி, திருக்குறள் நாட்குறிப்பு என்பனவற்றை 1932 - இலேயே தொடங்கி விட்டார். எங்கம் குறள்! எதிலும் குறள்! எல்லாம் குறள்! என்பதே வேலாவின் முற்றத் தெளிந்த முழுதுறு முடிவு.