உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 28.pdf/91

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

78

-

இளங்குமரனார் தமிழ்வளம் 28

குறளியம் என்ன? குறளாயம் என்ன? முழு நிலா முற்றம் என்ன? குறளாய மாநாடு என்ன? வட்டமென்ன, விருந்தென்ன, அழைப்பென்ன, அலைவென்ன அசைக்காமல் விடுமா? குடும்பத்து உறுப்பில் இப்படி எண்ணம் எழாமல் இராதே! ஒரே ஒரு முறை எழத்தான் செய்தது! விளைவு வினையாக வில்லை! விளைவு - பெரு விளைவே ஆக்கிற்று!

"நான் திருக்குறளைப் பரப்பி வாழ்வியலாக்க முனைகிறேன். என் வாழ்வே அதற்கெனக் கொள்கிறேன். அதனை எண்ணிய நாள் முதல் தூயனாகி வாழ்தலை உணர்கிறேன்; அத்தூய்மை பெருகிப் பெருகிச் - சிறக்கக் காண்கிறேன். வாழ்வும் வளமும் மேலும் மேலும் பெருகவே காண்கிறேன். வரும் அல்லல் களெல்லாம் கதிர் முன் பனியென அகல்தல் அறிகிறேன்; இவை நல்லனவா! என்னைப் போலவே தொழிலில் புகுந்து, என்னளவும் தேடாததுடன், அந்த, விடுதி இந்த விடுதி, அந்த வீடு இந்த வீடு, குடி கும்மாளம் என இன்னார் இன்னார் இருக்கிறார்களே; அப்படி இருப்பது நல்லதா? முடிவு செய்து சொல்லுங்கள்! எந்த வாழ்வு உங்களுக்கும் எனக்கும் குடும்பத்துக்கும் வழிமுறைக்கும் பெருமையும் பேறும் சேர்ப்பன? என்ற வினாமேல் வினாவாக்கி விளக்கியதன் விளைவு, குறளாயப் பணி, வேலா பணியன்று! வேலா குடும்பப் பணி என்னும் விரிவுடன் திகழ்கின்றது! உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசாத -செய்யாத வேலாவின் வெற்றி இது என்பதற்குத் தடை யென்ன?"

வேலாவினும் செல்வர் இலரோ? உளரே!

வேலாவினும் அறிவர் இலரோ? உளரே?

வேலாவினும் வணிகர் இலரோ? உளரே!

வேலாவினும் தொழிலர் இலரோ? உளரே!

வேலாவினும் இதழர் இலரோ? உளரே!

ஒருவர் இருவரா உளர்! பன்னூற்றுவர் பல்லாயிரவர் உளர்! வேலாவின் உணர்வினர் - திருக்குறள் உணர்வினர் திருக்குறள் நம்மறை எனும் உணர்வினர் செல்வருள் வணிகருள் - அறிவருள் -தொழிலருள் - இதழருள் எவருளர்? இவ்வெல்லாம் வடியவருள் எவருளர்?

'உணர்ச்சி வாயில் உணர்வோர் வலித்தே"