உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 28.pdf/92

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஈரோடு வேலா (வரலாறு)

79

என்ற தேர்ச்சியுரை பல்லாயிரவருள் ஒருவரைக் கண்டு தெளிந்துரைத்ததே யன்றோ!

தூண்டித் துலக்குதல்

வேலாவின் ஆழ்ந்த சிந்தனையும் அச்சிந்தனை வழிப்பட்ட தூண்டலும் வியப்பில் ஆழ்த்தும். அப்படிப் பட்டவற்றை எண்ணினால் மிகப்பல. அவற்றுள் ஒன்று, அவர் எழுத்தால்

வருவது:

66

'இருபதாம் நூற்றாண்டின் பாரகாவியம் எனப் புகழப்படும் இராவண காவியத்தின் ஆசிரியர் பெரும் புலவர் குழந்தை அவர்களுடன் நான் 1970-இல் உரையாடிக் கொண்டிருந்த போது ஒரு வேண்டுகோள் விடுத்தேன். எவ்வாறு நம் மக்களைப் புராணங்கள் எழுதி மூடர்கள் ஆக்கினார்களோ அவ்வாறே அதன் சான்றுகளைக் கொண்டே காவியம் படைத்துப் புராணப் புளுகுகளை நீக்கி மடமைகளை நீக்க வேண்டும் என்று கூறினேன்."

"தமிழ் நாட்டிற்குச் சரியான பழம் வரலாறு இல்லாத குறையைப் போக்க நான் விடுத்த வேண்டுகோளின்படி அரசிய லரங்கம் என்ற பாவியத்தை இயற்றினீர்களே! அதேபோல் புராணப் புளுகுகளைப் போக்கும் பாவியம் வேண்டும்" என்ற சிந்தனையை அவரிடம் ஏற்படுத்தினேன்.

இதையொட்டிய சிந்தனைகளில் தம் முழு நேரத்தையும் ஈடுபடுத்தலானார் பெரும் புலவர். ஏராளமான புராணங் களையும் வரலாற்று நூல்களையும் வேத இதிகாசங்களையும் திரும்ப திரும்ப ஆய்ந்து ஒரு கதை அமைப்பால் உருவாக்கி விட்டார். அதை என்னிடம் முதன் முதலாக (இராவண காவியம் இரண்டாம் பதிப்பு அச்சாகிக் கொண்டிருக்கும் ஞான்று) ஒரு நாள் இரவு கூறத் தொடங்கி அதன் பல அமைப்பு முறை களையும் விவரித்துக் கூறிக் கொண்டு வந்தார். அன்று அக் காவியத்தின் தலைப்பை சொல்லும் போது மறுநாள் விடிந்து விட்டது. அதன் பெயரே திராவிட காவியம்.

"சென்னையில் என்னுடன் தங்கியிருந்த போதும் சரி, அதற்குப்பின் காலமாகும் வரை இக்காவியச் சிந்தனைதான் அவருக்கு எந்நேரமும். இதன் உரைநடைச் சுருக்கத்தை ஒழுக செய்வதற்கே இரண்டு ஆண்டுகள் அவருக்கு பிடித்தனவாம்."