உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 28.pdf/93

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

80

இளங்குமரனார் தமிழ்வளம் - 28

இதைப்பற்றிப் பவானியில் வாழும் மகள் திருவாட்டி மு.சமரசம் க.மு.ப.இ. அவர்கள் கூறியதாவது: அய்யா அவர் இராவண காவியத்தை எழுதி முடிக்கச் சரியாக ஒரு மாத காலம்தான் ஆனது. திராவிட காலத்தின் உரைநடை அமைப்பை முடித்தவுடன் பாடல்களை எழுதத் தொடங்கினார். மொத்தமாகப் பல நாள்களில் இக்காவியத்தில்மூன்றில் ஒரு பகுதியை எழுதிவிட்டார். இன்னும் 15 நாட்கள் மட்டும் உயிருடன் இருந்திருந்தால் இப்பெரும் பணி முடிந்திருக்கும். நாங்கள் பார்க்கும் பொழுதெல்லாம் இந்நூலிற்காக இரவு பகல் பாராது படித்துக் கொண்டோ எழுதிக் கொண்டோதான் இருப்பார். தம் வாழ் நாளின் இறுதிப் பணியான இக்காவியத்தை மிகச் சிறப்பாக எழுத வேண்டும் என அயராது உழைத்தார். அவ்வேலைப் பளுவே அவர் உயிரை 22-9-72-இல் குடித்து விட்டது.

இதனைக் குறிக்கும் ஆசிரியர் வேலா,"இப்பெருங் காவியத்தின் மூன்றில் இருபகுதியை முடித்துத் தரவல்ல பகுத்தறிவு உள்ளமுடைய பாவலர் எங்குள்ளாரோ? முன் வருவாரோ?" என வினாவுகிறார். இவ்வினா அவர்தம் தூண்டித் துலக்கும் திறத்தின் வெளிப்பாடேயாம்.

குறளியம் தொடங்கிய நாளிலேயே அதனை அறிந்தவர் யான். அதன் தொடக்க நாளிலேயே "குறளியப் புகுவாயில் எழுதினேன் (1:4:8) பின்னரும் எழுதினேன். பதிப்பகத் தொடர்பு அதற்கு முன்னரே ஏற்பட்டது. எனினும் வேலாவை 1985 முதல் தான் நெருங்கிய தொடர்பு கொள்ளவ வாய்த்தது.அவ்வாய்ப்பு, குறளியத்தொடும் குறளாயத்தொடும் அணுக்கனாக்கிற்று. அவ்வப்போது ஆய்விலும் பொழிவிலும் தனியே கலந்துரை யாடலலும் யான் திருக்குறளுக்குக் காணும் புத்துரைகள் சிலவற்றை வேலா அறிய வாய்த்தது. அவர்தம் வாழ்வியல் புத்தாக்கப் பார்வையும் என்னுள் புகுந்தது.

இரண்டும் நிரந்து கலந்ததன் விளைவாகத் தெரிந்தெடுத்து ஒரு நூறுகுறள்களுக்கேனும் உரை வரையவேண்டும் என்னும் எண்ணம் என்னுள் எழுந்தது. அதனால் செந்தமிழ்ச் செல்வியில் சில குறள்களுக்குப் புத்துரை விளக்கம் எழுதினேன் குறளியத் திலும் எழுதினேன். நூலுக்கு முற்றாக உரை எழுதவேண்டும் என்னும் எண்ணம் எனக்கு உண்டாகவில்லை. முழுமைக்கும் முதற்கண் உரையும், பின்னே விளக்கவுரையும் வரைய வேண்டும் என்று தூண்டியவர் வேலா அவர்களே ஊடே ஊடே உரையைக்

"