உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 28.pdf/94

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஈரோடு வேலா (வரலாறு)

81

கேட்டும் கருத்துரைத்தும் சிக்கலான இடங்களில் குறளாயப் புலவர்கள் அன்பர்கள் ஆகியவர்களுடன் கலந்துரையாடவும் முன்னின்றவரும் வேலா அவர்களே!

நூலுரை வருவதற்கு முன்னரே அவ்வுரை பற்றி விரிந்த நல்லுரை கூறியதுடன், முன்னோட்டமாக முன்னுரையை வெளிப்படுத்திக் குறளிய வாசகர்களும் குறளாயப் பெருமக்களும் ஆர்வலர்களும் அறிஞர்களும் கருதும் கருதுகோள்களை அறிந்து கொள்ள விரும்பிக் குறளாயத்தில் வெளியிடவரும் வேலா அவர்களே கூட்டந்தோறும் ஓரிரு குறள்களுக்கேனும் யான் காணும் புத்துரைகளைக் கூறுதல்சிந்தனையைக் கிளர் உதவும் என்று கருத்துரைத்து அவ்வாறு வழி நடத்தியவரும் வேலா அவர்களே!

இவ்வாறு முன்னின்று முடித்து வைப்பார் மிக அரியர் என்பது வெளிப்படை. குறளியம் வாழ்வியல் நூல்; மறை நூல்; நம் மறை நூல்- எனின் குறளும் அக்குறளின் உரையும் கருவிகள் அல்லவோ! அக்கருவியைக் குறளயாம் தருதல் கடப்பாடே அல்லவோ! இவ்வுணர்வுகளே வேலாவின் உள்ளத்தில் இருந்த இயக்க, புத்துரை நூலாக வெளிப்பட வாய்த்துள்ளது! இஃது அவர் தம் தூண்டித்துலக்கும் செயற்பாட்டுச் சீர்மைக்கு வாய்த் துள்ள எத்துணையோ சான்றுகளுள் ஒன்றாகும்.

மக்கள்

-

குடும்பம்

வேலாவின் இன்ப அன்பு வாழ்வுப் பயனாக அரும்பிய அமிழ்த முளைகள் மூன்று. அவை வேல் பூங்கொடி, வேல் மலர்க்கொடி, வேல் சுடர்க்கொடி மூவர்க்கும் 'வேல்' உண்டோ! ஆம்! வேல் வெற்றிப் பொருள் தருவதைக் கண்ட பின்பு, வேல் இணைக்கப் படாமல்விடப்படுமோ?

மூத்த மகளார் வேல்பூங்கொடிக்கு 5-11-82 இல் திருமணம் நிகழ்ந்தது. துணைவர் எவர்? வாழ்வாங்கு வாழும் மாணிக்க பங்கயக் குடிக்கு ஒரு மகனாகத் தோன்றிய திருவாளர் மா. சக்திவேல். வேலொடும் பெயராலும் இணைந்து விட்ட அவர், வேல் குடும்பத்தொடும் இரண்டற இணைந்தார். வேல் நிறுவனங்களொடும் இணைந்தார்.; மாமனார் செய்து வரும் பொதுப் பணியொடும் இணைந்தார்; மாமனார் பொதுப் பணிக்கு ஏந்தாகும் வகையில், அவர் செய்துவந்த வணிக தொழில்- குடும்பப் பொறுப்புகளுக்கு தூணாக விளங்கி வருகிறார்.

-