உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 28.pdf/95

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

82

இளங்குமரனார் தமிழ்வளம் - 28

கொடிக்கு ஏற்ற கொழு கொம்பாம் கொழுநராகத் திகழ்கிறார் சக்திவேல்.

இவர்கள் அன்பு வாழ்வில் முகிழ்த்த அருமைச் செல்வன்

வேலரசு!

சக்திவேலர், புகுமுகம் படித்த அளவில் அமைந்து, வணிகத்தில் புகுமுகமாய், வேல்குடும்பத்துப் புகுமுகமானவர்.

வேல்பூங்கொடி பத்தாம் வகுப்புப் படித்து அமைந்தவர்; அடுத்தவேல்மலர்க்கொடியும் அப்படியே. வேல்சுடர்க்கொடி பயின்று வருகிறார். பேரனும் வீட்டிலே மழலை பொழிந்த மழலைப் பள்ளியிலும் பொழிகின்றான்.

குறளாயக் குடும்பம்

வேலாவின் தனிக்குடும்பச் சிறு குறிப்புகள் இவை. இவர்தம் குறள்வழிக் குடும்ப வரலாறு வாழ்வியலும் சுருங்கிய தாமோ? சுருங்கா அதனையும் சுருக்கியே சொல்ல வேண்டும். ஏனெனில் நூன்முறைகளுள் தலையாயது சுருங்க சொல்லல்; அடுத்தது விளங்க வைத்தல்; நவின்றோர்க்கினிமை; நன்மொழி புணர்த்தல் இன்ன! இவற்றைக் கருதித்தானே கூறவேண்டும்!

ஒருவர் மேல் நிலை ஆய்வில் தலைப்படுகிறார். குடும்ப நிலையின் பொருளுதவி போதவில்லை! அரசின் உதவியும் ஏற்ற அளவில் இல்லை! ஓராண்டுக்குத் திங்கள் ஒன்றுக்கு இருநூறு உருபா வாய்த்தால் இடையீடு இன்றி எடுத்த ஆய்வு நிறைவுறும்! வேலா உதவிக் கை நீள்கிறது! ஓராண்டும் உதவுகின்றது! உதவி பெற்ற நன்னெஞ்சம், நன்றி நெஞ்சம்! பின்னே நன்றிக் குறியாக ஒரு நூலைப்படைத்து மகிழ்கின்றது. அதனை நோக்கியா உதவிக்கு முந்தியது கை! அதனை நோக்கவில்லை என்பதற்காக நன்றியறிதலைத் துறந்து விடுமா நன்னெஞ்சம்!

ஒருவர் வாழும் வீட்டின்மேல் வரிக்கடன் பல்லாண்டுக் கடன்! அடுத்த நாள், தவணையின் முடிவு நாள்! நம்பிய இடங்கள் நற்றுணையாக வில்லை! நற்றுணையாம் இடம் தோன்றவு

மில்லை.

உள்ளூரா? பக்கத்தூரா? முந்நூறு அயிரத்திற்கு (கிலோ மீட்டருக்கு) அப்பாலாம் ஊர்; வந்து கேட்டு வாங்கிச் செல்லவும் இயலா நிலை! எதை நம்பி உறுதியாக வருவது! ஆனால் தம்முள் எழுந்த ஒர் நம்பிக்கை தொலைவரிச் செய்தியில் வருகிறது