உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 28.pdf/96

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஈரோடு வேலா (வரலாறு)

83

குறிப்பு! தொலைவரியிலேயே பறந்து போய் நிற்கிறது தொகை! எண்ணிப் பார்க்க முடியுமா? எண்ணி விதிர் விதிர்க்காமல் இருக்க முடியுமா?

காலமெல்லாம் அழுந்திய சமயப் பணியில் தோய்ந்த பெருமகனார் ஒருவர்; திருக்குறள் தொண்டிலும் திளைத்தவர்; அவர்க்கு மணிவிழா போகலாம்; உலகியல் வழக்கப்படி பொன்னாடை என்னும் பெயரால் துணியாடை போர்த்தி வரலாம்! ஆனால் வேலா உணர்வு அத்தகைய தன்றே! பொன்னாழி செய்து பூட்டிப் பாராட்டுகிறது. இப்படி ஒருவர்க்கா இருவர்க்கா?

-

பள்ளியில் பணி செய்கிறார் ஒருவர்; ஆனால் வரலாற்றுத் தோய்வில் அழுந்தியவர்; வரலாற்று நூல் தொகுப்புக்கு வரலாற்று ஆய்வுச் செலவுக்கு ஒரு பெருந்தொகை வேண்டும்! அத்தொகை வாய்த்தால் நாட்டுக்கு நற்பயனாம். அதனைத் தம் பொறுப்பிலே தாங்கும் வீட்டு வாய்ப்பு இல்லை! தம் குடி நலம் காத்தல் அளவுக்கு எதிர்பாராமையே சிறப்பு நிலை! அந் நிலையில் வேலா முன்வருகிறார் முன்பரத்தக்காரை அணுகு கிறார். முன்னேற்றத் தக்காரை முன்னேற்றுவதற்கு முன்னிற்றல் தானே முன்னிற்றல்! அதனை வேண்டுமாற்றால் செய்தார் வேலா!

நாடு அறிந்த நல்ல தமிழறிஞர்; முது பேரறிஞர் அவர்க்கு எண்பான் விழா! அவர் ஊரிலே - அவர் வீட்டிலே -நிகழ்ச்சி இருக்குமே! அங்கே போய் தலைகாட்டி வந்தால் போதாதோ? உலகியல் அப்படித்தானே பெரும்பாலும் இருக்கிறது! ஆனால், விலக்கு வேண்டுமே! விலக்கு வேலா வடிவில் பளிச்சிட்டது. ஈரோட்டில் பிறையாயிரப் பெருவிழாவாக எடுத்தார்! பின்னே எண்பத்து ஐந்தாம் ஆண்டு விழாவும் தொண்ணூறாம் விழாவும் எடுத்தார். ஒருவரைப் பார்க்கிறார், உலகத் தமிழ் மாநாடு கோலாலம்பூரில் நடை பெற இருக்கிறது; குறளாயத் தூதாகச் சென்று வருக; உங்கள் பெயரைப் பதிவு செய்து விடுகிறோம்; போக்குவரவுத் தொகையைக் குறளாயம் தந்து விடும்; போய் வருக" என்கிறார் வேலா! உதவி வேண்டினாரா? இல்லை! வேண்டாமலே, வேண்டிக் கூறிய வேட்கையுரை! சொல்வது என்ன? சொல்லளவில்நிற்பதா? செய்தது தானே! நினைத்தலும் செய்தலோடு ஒக்கும் என்பதன்றோ வள்ளுவம்! நாங்கள் குறளாயத் திருமணம் நடத்துகிறோம்; மெத்த மகிழ்ச்சி; நாங்களே வந்து நடத்தி வைக்கிறோம் குறளாயத் திருமணமாகவே