உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 28.pdf/97

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

84

இளங்குமரனார் தமிழ்வளம் – 28

நிகழும்! வேலா முன்னிற்பார்! குறளாயம் சூழநிற்கும்! வாழ்த்தும் உரைக்கும்! விழாவும் சிறக்கும்! எந்தச் செலவும் குறளாயத்திற்காக மணவீட்டினர்க்கு நேராது. ஆனால் வரவு வருதல் தவறாமல் வாய்க்கும்!

மணமகளரா

குறளாயச் செலவு என்பது என்ன? வேலா செலவே! எதனால் வேலா இப்படிச் செய்கிறார்! படிப்பவரா, ஆய்பவரா, மணிவிழாவினரா, ஆயிரம் பிறையினரா, மணவாளரா, வேலா தம்குடும்ப உறுப்பாகவே குறளாயக் குடும்ப உறுப்பாகவே பார்க்கிறார்! அப்படிப் பார்த்து பார்த்துப் பழகிப் போய் விட்டார். அப்படி பாராமல் வேறு வகையில் பார்க்க முடியாது என்னும் வகையில் தழும்பேறிப் போய் விட்டார். குறள் வழி நெஞ்சம் எப்படி இருக்கும் - இருக்க வேண்டும் என்பதை நிலைநாட்டி வருவதும்-பல்ல பல செயல்களாலும் நிலைநாட்டி வருவது வேலாவின் நெஞ்சம்! தனித்தனியே பெயர் சுட்டி விளக்கம் சுட்டிச் சொல்ல வேண்டும் செய்திகளுக்குப் பொதுச் சுட்டு வழி மிக மிக ஏற்றது. ஏனெனில் ஒரு பொதுக் குறிப்பு என்பது பல சிறப்பு குறிப்பு அல்லது தனிக்குறிப்குகளின் தொகுதி அன்றோ! வள்ளுவர் படைத்த பிறிதுமொழி பன்னூற்றை ஒன்றால் சொல்வதன்றோ!

-

இயற்கையை ஒறுத்தல் :

"யான் இயற்கையை ஒறுத்தேன்; இயற்கை என்னை ஒறுக்கிறது இப்பொழுது” என்ற திரு.வி.க. அவர் தடமும் இடமும் காண வியலாத நோயராகிய நிலையில் கூறிய மணிமொழி இவர் ஏன் கூற வேண்டும்! தாம்படும்பாட்டைப் பிறர்படக் கூடாதே! என்னும் பேருள்ளம் கூறத்தான் செய்யும்!

வேலா இயற்கையை ஒறுத்தார் ; ஒறுத்து வருகிறார்; இயற்கை தன் முனைப்பைக் காட்டி ஒறுக்கத் தவறுமா? அது ஒறுக்கத் துணிந்த பின்னும் அதனை ஒறுக்கத் துணிகிறார்; ஒறுக்கிறார்! இதனைப் பாராட்டவும் முடியாது! பாராட்டாமல் இருக்கவும் முடியாது! இரண்டும் கெட்டான் நிலை அவர்தம் அன்பர்களுக்கும் நண்பர்களுக்கும் ஆர்வலர்களுக்கும்!

எட்டு மணி நேர வேலையையும் தட்டில்லாமல் - தயக்கம் இல்லாமல் அதற்கே செலவிட்டோம்" என்று கூற மனச்சான்று உடையவர்கள் எத்தனை பேரால் இயலும்! வேலைக்களத்திற்கு அலுவலகத்திற்குச் செல்வதே ஓய்வு கொள்வதற்கு எனத்