உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 28.pdf/98

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஈரோடு வேலா (வரலாறு)

85

துணுக்குப் போட்டுப் பாராட்டும் சீராட்டும் நடத்தாத இதழ் ஒன்றைக் காண இயலுமா? துணுக்கே வெளியிடாத இதழ் என்றால், கதையிலே இடம் பெறும்; கட்டுரையிலே இடம் பெறும்; தலைப்புரையிலே இடம் பெறும்! அவ்வளவு பேர் போன கடமை வீரர்கள் பல்கிப் பெருகும் பெருமைக்குரிய பெரு நாடு இது. இந் நாட்டில் வேலா போலவும் சிலர் சிலர்!

-

வேலா எத்தனை மணிப் பொழுது உழைக்கிறார்? உண்ணும் வேளைக்கு உண்டதுண்டா? உறங்கும் வேளைக்கு உறங்கிய துண்டா? ஒரே வேளையிலே எத்தனை வேலை! அத்தனையும் அமைந்தவேலையா? எத்தனை எத்தனை சிக்கலானவேலை! தம்மை மறந்து - இனி முடியவே முடியாது படுத்தே ஆகவேண்டும் என உடல் அலுப்பு அயர்வு - படுக்கையில் தள்ளினால் அல்லாமல் அவர் உறங்குவது இல்லை! ஓய்ந்து அமர்வதோ அறவே இல்லை! இவை இயற்கையை ஒறுப்பவை இல்லையா?

-

உடலும் ஒரு 'பொறி' தானே! நுண்ணிதின் நுண்ணிய பொறி அல்லவோ உடல்! எந்தப் பொறியாவது எப்படித்தான் திறத்தோடு செய்யப்பட்டது எனினும், அதற்கு வேண்டும் ஊட்டம் தவறாது தருதலும், ஓட்டத்திற்கு ஓய்வு தருதலும், உறுப்புகளைச் சீர் செய்து போற்றுதலும் இல்லாமல் இயலுமா? பொறியாக இருக்கமா?

அப்பொறிக்குரிய விதிமுறையிலும் சீரிதிற்பேண வேண்டிய விதிமுறையுடையதன்றோ உடல்! வேலாவின் தொழில் வணிகப் பணிகளும் பொதுப்பணிகளும் அவர் பொழுதை எல்லாம் பற்றிக் கொள்கின்றன! அவற்றுக்கு உடந்தையாக வேலா காலமெல்லாம் இருந்து விட்டார்! அதன் விளைவு அவரை நோயர் ஆக்கிற்று! மருந்தர் ஆக்கிற்று! சிறுநீரகங்களை மாற்றிப் பொருத்தும் கடுமருத்துவத்திற்கு ஆட்படுத்திற்று! அவ்வறுவை மருத்துவத்திற்கு இனிப்பு நோய் கூடுமோ? அதுவும் இருந்தது! இனிப்பு நோயை ஒடுக்கால் நீரகமாற்றுச் செய்ய இயலுமோ? எல்லாம் செவ்வையாய் முடிந்தன! சீராய்த் தேறின! புன்முறு வலுடன் மருத்துவ மனைக்குப் போய் புன்முறுவலுடன்

மீண்டார்!

-

சென்னை விருந்தினர் (Gust) மருத்துவமனையில் சேர்ந்தார் வேலா; பலவற்றை நாடித் தேடி ஆய்ந்து நிறைவில் கண்ட