உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 28.pdf/99

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

86

இளங்குமரனார் தமிழ்வளம் - 28

நிறைவிடம் இது. இதன் ஒளிபரப்பலுக்கு மூலவர்எவர்? திரு.சி.எம்.தியாகராசன் என்பவர். அவர்க்குத் தக அமைந்த அருமைத் துணைகள்! குறிப்பறிந்து பணி செய்யும் கடமை உணர்வினர்! நோய் நாடி நோய் முதல் நாடி அதுதணிக்கும் வாய் நாடி வாய்ப்பச் செயல் என்னும் குறளுக்குப் பேருரை வேண்டுமா? மருத்துவர் தியாகராசனார் என அவர் பெயரைச் சுட்டுதல் சாலும்! இயல்பாகவே அருண் மருத்துவராகிய அவர், தமிழ்க் காதலரும் ஆவர்; தமிழ்த் தொண்டரைப் போற்றும் காதலரும் ஆவர்.

அதனால், வேலாவின் மருத்துவப் பணி அவர்க்குத் தனிச் சிறப்பும் விருப்பும் வழங்கும் பணியாயிற்று. நேரம் அறிய அவர், நேரம் கருதாமல்உரையாடவும் நேர்ந்ததெனில் அந் நேயத்தை வழங்கியது தமிழ்க் காதலும், நம் மறைத் தொண்டுமேயாம்; ஒரு நாள் கூறுகிறார் மேதகை மருத்துவர்; தமிழ் வினாவிடுவிப்பு (குவிசு) தொலைக்காட்சியில் காட்டினார்கள். தமிழ் வினாவுக்குத் தமிழில் விடை வழங்கத்தக்க மாணவர்களை அவர்கள் தேர்ந்து கொள்ள வில்லை. ஆங்கில வழிக் கல்வி மாணவரிடம் தமிழ் விடை நோக்கல் வெற்றி தருமா? அவர்கள் சொல்லும் மறுமொழி யாகிய ஆங்கிலத்தைத் தமிழாக்கஞ் செய்து சொல்ல வேண்டிய நிலை உண்டாகியது; அது இயல்பாக இல்லை. ஏன் நாட்டுப் புறத்தில் நன்கு தமிழ் வழிக் கல்வி பயின்ற மாணவர் களை அவ்விடையளிப்புக்கு தேர்ந்தெடுத்திருக்கலாமே என்ற அவர், "அன்றைய நிகழ்ச்சியைப் பார்த்துத் தலையைப் பிடிக்கும் படியாக இருந்தது என்றார்! "ஆங்கில வழியில் பயின்று ஆங்கில முறை மருத்துவத்தில் ஓங்கும் அவரின் தமிழ் வழிச் சிந்தனை இஃதென எண்ண அவர் தம் நல்லுள்ளம் புலப்பட்டது என்று வேலா நன்றியுணர்வுடன் பாராட்டுவதைக் கேட்டுக் கேட்பவரும் தலையசைத்தல் நேரிடைக் காட்சியாகும்."

மருத்துவரைக் குறித்த நாம், மருத்துவ காலத்தில் மருத்துவ மனையிலும் ஓய்வு நிலையிலும் குடும்பத்து உறுப்பினருள் ஒருவராய் உழுவது அன்பினராய், தொண்டின் உறைப்பினால் ஒன்றாகி உடனாகி உணர்வாகி இருந்தது பெருமகனார் சித்தோட்டுப் பாவலர் குமர நடவரச் ஈவப்பனார் ஆவர் என்பதையும் நினைவு கூர்கிறோம்! தமிழ் மறவர் ஈவப்பர் என்று மூதறிஞர் செம்மலால் பாராட்டப்பட்டவர் அவர் முத்தமிழ்க் காவலருடன் தில்லிக்குக் குறளாயச் சார்பில் சென்று தமிழ்