உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 29.pdf/102

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இரு கடற்கால்கள்

91

விஞ்சியது. அன்றியும் அரசியல் பிணக்குகளும், எதிர்ப்புக்களும் திட்ட நிறைவேற்றத்திற்கும், பங்குத்தொகைச் சேர்ப்புக்கும் தடை செய்தன. மனித இயன்முறை கடந்து வன்முறையாகத் தொழிலாளர்களை வேலை வாங்குவதாகப் பிரிட்டன் பழி கிளப்பியது. அக்கூற்றைத் துருக்கியும் 'ஆமாம்' என்று வரவேற்றது. இதற்குள் டிலெசெப்சின் நண்பர் சயீத் காலமானார். அவருக்குப் பின்வந்த மன்னர் இசுமாயில் பிரிட்டனின் சார்பாளராக இருந்தார். அதனால் வளர்ந்து வந்த திட்டம் தளர்ந்தது. நன்னீர்க் கால்வாய்ப் பகுதியைத் தம்மிடம் ஒப்படைக்வேண்டும் என்று கடலிணைப்புக் கழகத்திற்குக் கட்டளையிட்டார். அவர் கட்டளை அஃதாயினும், தலைமைப்பொறியாளர்கள் ஏற்று வேலையை நிறுத்தினர் அல்லர். இத்தகு சூழலில் டிலெசெப்சு, பிரான்சு மன்னர் மூன்றாம் நெப்போலியனை உதவுமாறு வேண்டினார். அவர் நடுவராக இருந்து வழங்கும் முடிவை இரு பகுதியாரும் ஏற்பதாக ஒப்பினர். அறிவார்ந்த மன்னன் நெப்போலியன், திட்டம் நடைபெறுவதற்கு ஏற்ற பொறுப்பும் தகுதியும் உடைய தீர்ப்பு வழங்கினார்.

CC

'நன்னீர்க் கால்வாய்ப் பகுதியை மன்னவர் விரும்பிய வண்ணமே அவரிடம் ஒப்படைத்தல் வேண்டும்" என்று நெப்போலியன் தீர்ப்பு வழங்கினார். "அதற்கு ஈடாகவும், திடுமென வேலைநிறுத்தம் ஆகிய இழப்புக்காகவும் கடற்கால் கழகத்துக்கு மன்னர் 840 இலட்சம் வெள்ளி தரவேண்டும்" என்று கூறினார். இத் தீர்ப்பால் கடற்கால் பணி தொடர்ந்து நடந்ததுடன் பொருள் தட்டுப்பாடும் ஓரளவு குறைந்து, திட்டத்திற்கு உதவியாயிற்று.

திட்டவேலை நான்கு பகுதிகளாகப் பிரிக்கப்பெற்றன. நான்கு வேறு குழுக்களிடம் வேலை பகுதிகள் ஒப்படைக்கப் பெற்றன. முதற் பிரிவினர் நீற்றுக் கட்டிப் பாளங்கள் உருவாக்கினர். அடுத்த பகுதியினர் கடற்காலில் 60 கிலோ மீட்டர் தொலைவுக்கு மணல்தோண்டும் பொறுப்பேற்றனர். வேறொரு பிரிவினர் 13 கிலோ மீட்டர் தொலைவுக்கு கற்பாறை பிளக்கும் கடமை ஏற்றனர்.இறுதிப் பிரிவினர், எஞ்சிய கடற்கால் பகுதியைத் தோண்டும் பணி ஏற்றனர். இவ்வாறாக தனித் தனியே பொறுப்பு வாய்ந்த குழுக்களின் தலைமையில் திட்டம் நடந்து கொண்டிருந்தது.

கடற்கால், கடலுக்குக் கடல் ஏறத்தாழ 100 கல் நீளம் இருந்தது. அதில் 77 கல் தொலைவுக்குக் கடற்காலின் மேற்பரப்பில் 327 அடி அகலமும், அடிப் பகுதியில் 72 அடி அகலமும், 26 அடி ஆழமும் தோண்டப்பட்டது. கற்பாறையுள்ள இடங்களில் மேற் பரப்பு 196 அடி அளவு கொண்டு தோண்டப்பட்டது.