உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 29.pdf/101

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

66

6. சூயசுக் கடலிணைப்புத் திட்ட

நிறைவேற்றம் பற்றி எழுதுக.

ஊழையும் உப்பக்கங் காண்பர், உலைவின்றித் தாழா துஞற்று பவர்" என்னும் வள்ளுவனார் வாய்மொழிக்கு ஏற்பப் பல்லாற்றானும் தடைப்பட்டு வந்த சூயசுக் கடல் இணைப்புத் திட்டம் உலக நலங் கருதிய பெருமகனார் பெர்டினாண்டு டிலெசெப்சு அவர்களின் அயரா முயற்சியால் நிறைவேறிற்று.

சூயசுத் திட்டத்தின் தொடக்கவிழா 1859 ஆம் ஆண்டு ஏப்ரல் திங்கள் ஐந்தாம் நாள் நடைபெற்றது. பல்லாயிரம் தொழிலாளர் களும், பணியாளர்களும், பொறியில் வல்லார்களும் பேராரவாரங் களுக்கு இடையே தம் பணியைத் தொடங்கினார். முதன்முதலாக டிலெசெப்சு ஒரு கூடை மண்ணைத் தம் கையால் வெட்டி வெளியேற்றினார். அதன்பின், தொடர்ந்து வேலை நடைபெற்றது.

எகிப்திய அரசின் முயற்சியால், 60000 தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டனர். அப்பணியில் எகிப்தியரே அன்றிப் பிற நாட்டவர்களும் ஈடுபட்டிருந்தனர். புற்றில் இருந்து புறப்பட்டுச் செல்லும் எறும்புக் கூட்டம்போல் இரவு பகல் பாராமல் பணியாற்றினர். உலகச் சாதனையில் தமக்குள்ள பங்கை உணர்ந்து உவகை கூர்ந்தனர்.

கடற்கால், கடலுக்குக் கடல் ஏறத்தாழ நூறுகல் நீளமுடையது. அவ்வளவு நீளத்திலும் பெரிய கப்பல்கள் செல்லுமாறு அகல ஆழம் உடைய கால்வாய் வெட்டுதல் வேண்டும். மண், மணலை அன்றிச் சில இடங்களில் பாறையையும் அகற்ற வேண்டியிருந்தது. குடிநீர்த் தேவையை நிறைவேற்றுவதற்காக நன்னீர்க் கால்வாய் ஒன்றும் தனியாக வெட்டிக் கொண்டு வரவேண்டியிருந்தது. தொழிலாளர்களுக்கும், அலுவலர்களுக்கும் குடியிருப்புகள் அமைத்தல் இன்றியமையாததாயிற்று. இத்துணைப்பணிகளும் ணைந்து நடைபெற்றன.

உலகம் இதற்குமுன் கண்டிராத உயரிய திட்டம் இது. ஆதலால் செலவு முதற்கண் திட்டமிட்டுக் கொண்ட அளவினை