உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 29.pdf/100

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இரு கடற்கால்கள்

89

துயர் கொண்டது. பிரிட்டன், தன் மனக்குறையை வன்மையாகத் தெரிவித்தது. போதாதென்று, துருக்கி சுல்தான் இத்திட்டத்திற்கு இசையாது இருக்குமாறு தம் செல்வாக்குடைய தூதர் ரெட்கிளிப் என்பவர் வழியாக முயன்றது.

டிலெசெப்சு கடற்கால் திட்டத்திற்கு இசைவு பெற வேண்டித் துருக்கிக்குச் சென்றார். சுல்தான் ஆதரவு அவருக்குக் கிட்ட வில்லை. பிரிட்டீசுத் தூதரைக் கண்டுபேச டிலெசெப்சு விழைந்தும் அவருக்கு வாய்ப்புத் தரப்பெறவில்லை. என் செய்வார் டிலெசெப்சு! நேரிடையாகப் பிரிட்டனுக்குச் சென்று முதலமைச்சர் பாமர்சனிடம் வாதாடினார். பிரிட்டன் அரசும், செய்தித்தாள் களும் அவருக்கு எதிரிடையாகவே வரிந்து கட்டிக் கொண்டு நின்றன!

டிலெசெப்சு விடாப்பிடியாக முயன்றார்! பிரிட்டனின் நிலை மாறவில்லை. அன்றியும் சூயசுத் திட்டம் துருக்கிக்குக் கேடு பயக்கும் என்று கிளப்பி விட்டுத் தடைபடுத்திக் கொண்டிருந்தது. இந்நிலை எகிப்திய மன்னர் சயீதீன் தன்மான உணர்வைத் தட்டி எழுப்பியது. வெதும்பி வெகுண்டெழுந்தார் அவர். "சூயசுக் கடற்கால் இணைப்பு உள்நாட்டுத் திட்டம். ஆதலால் துருக்கியின் இசைவு வேண்டுவதில்லை; திட்டம் தொடங்கலாம்" என்று துணிந்து ஆணையிட்டார்! "வருந்தி அழைத்தாலும் வாராத வாரா, பொருந்துவன போமின் என்றால் போகா என்பது போல் திட்டம் உறுதியாகி விட்டது. டிலெசெப்சு மகிழ்ந்தார்; உலகமும் மகிழ்ந்தது! ஓருலக உணர்வும் மலர்ந்தது! வாழ்க அயராமுயற்சி! வெல்க வீரர் டிலேசெப்சு!