உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 29.pdf/99

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

88

இளங்குமரனார் தமிழ்வளம் - 29

டிலெசெப்சின் நண்பர் இராட்டர் டாம் என்பவர். எகிப்தில் டச்சுத் தூதரகத் தலைவராக அவர் இருந்தார். அவருக்கு ஒரு முடங்கல் தீட்டி அவர் வழியாக எகிப்திய மன்னர் அப்பாசிடம் தம் திட்டத்தை எடுத்துரைக்க வேண்டினார். அதற்கு வாய்ப்பான பதில் கிட்டவில்லை. அரசர் அப்பாசை அடுத்து வந்த மன்னர் டிலெசெப்சின் இளமைக் கால நண்பர். எனவே உரிமை பாராட்டி உண்மை நிலைமையை அவருக்கு விளக்கி எழுதினார். அவரும் அரசியல் முறையில் அல்லாமல் அன்பு முறையிலே அழைப்பு விடுத்துக் கலந்து பேசினார். திட்டத்தையும் உவகையுடன் ஏற்றுக் கொண்டார்.

கி.பி.1856-ஆம் ஆண்டு சனவரித் திங்களில் டிலெசெப்சின் ஆவலும், எகிப்து மன்னர் இசைவும் உறுதிப்பத்திர உருவங் கொண்டன. அவ்வுறுதிப் பத்திரத் திட்டங்களே இறுதிவரை எழுத்து எழுத்தாகப் பின்பற்றப்பட்டது என்றோ, சிறிய பெரிய மாற்றங்கள் எவையும் செய்யப்பெறவில்லை என்றோ உறுதி கூறுதற்கு இல்லை. நிலைமைக்கும் சூழ்நிலைக்கும் ஏற்ற மாறுதல்கள் செய்யப்பட்ட திட்டம் நிறைவேற்றப் பெற்றது. எனினும் 1856-ஆம் ஆண்டு உறுதிப் பத்திரமே திட்டத்தின் அடிப்படையாக இருந்தது என்று துணிந்து கூறலாம்.

சூயசுக் கடற்கால் இணைப்பு பெர்டினாண்டு டிலெசெப்சுக்கும், அவர் தலைமையில் அமையும் ஒரு கூட்டுக் கழகத்திற்கும் உரிமையாக இருந்தது. கூட்டுக்கழகம், 'சூயசுக் கடற்கால் முழு உலகக் கழகம்' என்ற பெயருடன் விளங்கவேண்டும் என்றும், தரப்பெறும் உரிமை கடற்கால் திறக்கப்பட்ட நாளில் இருந்து 99 ஆண்டுகளுக்குச் செல்லுபடியாகும் என்றும், அவ்வாண்டு நிறையும் போது, உரிமை வழங்கியவரிடமே உரிமை மீண்டும் வந்து சேரும் என்றும் உறுதிப்படுத்தப்பட்டிருந்தது. இவ்வுரிமையை வழங்கிய தற்காக எகிப்திய அரசுக்கு இத்திட்டத்தால் பெறும் ஊதியத்தில் 15 விழுக்காடு வரியாகத் தர வேண்டும்; அதேபோல் எகிப்திய அரசினர் கடற்காலுக்கு வேண்டிய நிலவழி வாய்ப்புச் செய்து உதவுதல் வேண்டும். இவ்வாறெல்லாம் திட்டமிட்டு உறுதிப்பத்திரம் எழுதினர். ஆயினும் திட்டத்தை உடனடியாகச் செயலில் கொண்டு வர இயலவில்லை.

எகிப்தின் மேலுரிமை துருக்கியினிடம் இருந்தது. ஆதலால் அதன் ஒப்புதலும் வேண்டியிருந்தது. ஆனால் இத்திட்டத்திற்குப் பிரிட்டன் தொடக்கத்தில் இருந்தே முட்டுக்கட்டையாக இருந்தது. தனி மனிதர் ஒருவர்க்கு இப்பெரிய உரிமையை வழங்கியது பற்றித்