உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 29.pdf/110

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இரு கடற்கால்கள்

99

உண்டாகியது! கிளர்ச்சி மூண்டு வலுத்தது. ஐரோப்பியர் உடைமைகள் பாழாயின. 50 பேர்கள் உயிர் இழந்தனர். இதனால் பிரிட்டீசுப்படை எகிப்துக்கு விரைந்தது. இசுமாலியா நகரைத் தன்னகப்படுத்திற்று. பிரிட்டீசார் எகிப்தில் தம் காலை வலுவாக ஊன்றிக் கொண்டனர்.

சூயசுக் கடற்கால் ஆட்சிப் பொறுப்பைப் பிரிட்டன் ஏற்றுக் கொள்ளும் வாய்ப்பும் உண்டாயிற்று. இந்நிலையில் செருமனி, துருக்கியுடன் சேர்ந்துகொண்டு எகிப்தைத் தன் கைக்கீழ் கொண்டுவரும் திட்டத்தில் இறங்கியது. இது பிரிட்டனுக்கு அச்சத்தை உண்டாக்கியது. எகிப்தில் துருக்கியின் மேலுரிமை முடிந்துவிட்டது என்று பிரிட்டன் ஒரு பேரிடியை வீசியது. இதைக்கேட்ட துருக்கி கொதித்தெழுந்தது. எழுந்த விரைவிலேயே பிரிட்டனால் தடுத்து நிறுத்தவும் பெற்றது. 1941-42 ஆம் ஆண்டு களில் எகிப்தும் சூயசும் இத்தாலியின் பெருந் தாக்குதலுக்கு ஆளாயின. பிரிட்டனே முன்னின்று காத்தது. தாக்கிய நாடுகளே தாக்குதலுக்கு உள்ளாகும் நிலைமை உண்டாயிற்று!

1914இல் துருக்கியின் மேலுரிமையை ஒழித்த பிரிட்டன் அதற்குக் காப்பாட்சி நல்கியது. ஆனால் தேசிய உணர்ச்சி காப்பாட்சி அளவில் அமையவில்லை. தன்னாட்சியை வேண்டியது. 1922இல் எகிப்தில் காப்பாட்சி முடிந்ததாகப் பிரிட்டன் அறிவித்தது. ஆனால் பெயரளவில் இருந்ததே அன்றிச் செயலில் வரவில்லை. ஆகவே 1924இல் எகிப்திய மன்னர் சாக்லூல் எகிப்தில் இருந்து பிரிட்டனும் படைகளும் நிதி நீதித்துறைகளில் ஆலோசகராக இருக்கும் ஐரோப்பியர்களும் அகல வேண்டும் என்றும், எகிப்திய ஆட்சி, வெளிநாட்டுத் தொடர்பு இவற்றில் பிரிட்டன் தலையிடக் கூடாது என்றும், எகிப்தில் வாழும் சிறுபான்மையினர், அயல் நாட்டினர் இவர்களையும் சூயசையும் காக்கும் பொறுப்பு எகிப்தியருக்கே இருக்க வேண்டும் என்றும், பிரிட்டனின் முதல் வரிடம் வலியுறுத்தினர். இது, பிரிட்டன் விட்டுக் கொடுக்கும் உதவிகளைப்பெற எகிப்து விரும்பவில்லை; அதனை வெளி யேற்றவே விரும்பியது என்பதைக் காட்டும். எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் எங்களுடையனவே! அன்னியர் புகலென்ன நீதி என்னும் உரிமையுணர்வு கொழுந்து விட்டு எரிந்தது.

1952-இல் குடியரசுப் புரட்சி நடைபெற்றது. "பிரிட்டனின் படைகள் உடனடியாக வெளியேற வேண்டும். எகிப்தின் பாதுகாப்புக்கு ஊறுபாடு உண்டானால் உதவிக்கு வரலாம்; ஆனால் அப்பணி முடிந்ததும் அகன்று தீரவேண்டும்; எகிப்துக்