உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 29.pdf/112

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

10. புத்துலகக் கனவு என்பது பற்றித்

தொகுத்தெழுதுக.

நல்ல கனவுகள் வல்லவர்க்கு வாய்க்குமானால் அது நனவாகி நாடும் உலகும் நலம்பெற உதவும். அவ்வகையால் புத்துலகமாம் அமெரிக்காவில் தோன்றிய பனாமா இணைப்புக் கனவு பரந்த இரண்டு உலகத்தையும் சுருக்கி, ஓருலகாக இணைப்பதில் பெரும் பங்கு கொண்டுள்ளது. அதனைப்பற்றிக் காண்போம்.

அமெரிக்காவை முதன்முதலாகக் கண்ட கடலோடி கொலம்பசு. ஆனால் முதற்கண் பனாமாப் பகுதியைக் கண்டவர் ரோடரி கோடி என்பவரே. அவர் பனாமாவை 1501ஆம் ஆண்டில் கண்டார். 1502ஆம் ஆண்டில் கொலம்பசு செய்த நான்காம் கடற்பயணத்தின்போதே பனாமாவைக் கண்டார். அவரிடம் மேற்கிந்தியப் பழங்குடி மக்கள் பனாவைக் கடந்து செல்ல ஒரு கடற்கால் இருப்பதாகக் கூறினர். ஆயினும் அக்கடற்காலை கொலம்பசு கண்டார் அல்லர். அவருக்குப் பின் நூனெசு டி பல்போவா என்பவரும் இச்செய்தியைக் கேள்விப்பட்டார். அவர் முயன்று பார்த்துக் கடற்கால் எதுவும் இல்லை; நிலக்காலே உண்டு என்று தெளிந்தார். அவரே பசிபிக் கடலைக் கண்டு பனாமாத் திட்டத்தையும் கனவு கண்டார். ஆதலால் பசிபிக் மாகடலில் பல்போவா என்னும் ஒரு துறைமுகம் அவர் பெயரால் பின்னாளில் அமைக்கப் பெற்றது.

பனாமாத்திட்டத்திற்கு முதற்கண் செயல்முறை நடவடிக்கை எடுத்துக்கொண்டவர் இசுபானிய நாட்டின் அரசரான 5-ம் சார்லசு என்பவரே. அவர் பனாமா வட்டார ஆட்சித் தலைவருக்கு 1534ஆம் ஆண்டிலேயே செயல்முறை ஆய்வு செய்யுமாறு கட்டளை இட்டார். அவர் கருதிய வண்ணம் நில ஆய்வு வெற்றி தரவில்லை. வட்டாரத் தலைவரின் அறிக்கை திட்டத்திற்குக் கேடு செய்யும் நிலையில் இருந்தது. வீரன் கென்னாண்டோ பின்னர் இத்திட்ட ஆய்வில் முனைந்தார். நான்கு பாதைகளில் ஆய்வு நடாத்தினார்.