உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 29.pdf/113

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

102

இளங்குமரனார் தமிழ்வளம் - 29

இவ்வாறே நான்கு நூற்றாண்டுகள் அதாவது 16 முதல் 20-ம் நூற்றாண்டு வரை பலநாடுகள் இந்த ஆராய்ச்சியில் ஈடுபட்டன. எழுத்தாற்றல் மிக்க வான்கம்போர்டு, பெஞ்சமின் பிராங்கலின் ஆகியோர் தம் எழுத்து வன்மையால் திட்டம்பற்றி ஆய்வாளர் களைத் தட்டி எழுப்பினர். தூயதிரு சைமன் கழகத்தார் சூயசுத் திட்டத்துடன் பனாமா திட்டத்தையும் இணைத்து விளம்பரப் படுத்தினர்.

19-ஆம் நூற்றாண்டின் முதற்பகுதியில் புத்துலகக் குடியேற்றத்தில் இசுபானிய நாட்டிற்கு இருந்த ஆதிக்கம் தகர்ந்தது. அமெரிக்கா முதலாய மேலை நாடுகள் பனாமா ஆய்வில் தலைப்பட்டன. அமெரிக்க உள் நாட்டமைச்சர் கென்ரிகிளே என்பவரும் காலன் என்பவரும் திட்டவரைவுகள் செய்வதில் முனைந்தனர். நியூயார்க்கைச் சேர்ந்த பாமர்சு என்பவர் கொலம்பிய குடியரசுடன் ஒப்பந்தம் செய்துகொள்ள முயன்றார். அமெரிக்கக் குடியரசுத் தலைவர் சாக்சன் ஆய்வு நடத்தினார். கொலம்பிய குடியரசுடன் ஒப்பந்தம் செய்யவும் முயன்றார். ஆனால் இவையெல்லாம் அரைகுறை முயற்சிகளாகவே நின்றன.

1849-ஆம் ஆண்டில் காலிபோர்னியாவில் தங்கம் வெட்டி எடுக்கப்பெற்றது. அமெரிக்கக் கூட்டரசின் மேல் கடல் பகுதியான அக்காலிபோர்னியாவில் இருந்து கீழ்கரைப் பகுதிக்குத் தங்கத்தைக் கொண்டு செல்லவும், பிறதொடர்புகள் கொள்ளவும் வேண்டிய தாயிற்று.ஆதலால் மேற்கு, கிழக்குக் கடற்கரைகளை இணைக்கும் முனைப்பில் பனாமா இருப்புப் பாதை வழி உருவாயிற்று. இந்நிலவழி பனாமாக்கடல்வழி உண்டாகப் பெருந் தூண்டுதலாக இருந்தது.

1879-ஆம் ஆண்டு லூசியன் வைசு என்பவர் கொலம்பியா அரசுடன் ஒப்பந்தம் செய்து கடற்கால் பணியைத் தொடங்கினார். பின்னர்ப் பன்னாட்டுப் பேரவை ஒன்றுகூடி இத்திட்டம் பற்றி ஆய்ந்தது. வைசு பெற்றிரந்த உரிமையை வாங்க முடிவு செய்தது. முழு உலகக் கழகம் நிறுவி அதன் தலைமைப் பொறுப்பைச் சூயசுத் திட்ட முதல்வர் டிலெசெப்சே கொள்ள முடிவாகியது. வேலையும் தொடக்கம் ஆகியது. இவ்வாறாகப் புத்துலகம் கண்ட கனவு தன் அடியெடுப்பைத் தொடங்கி வைத்தது.