உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 29.pdf/118

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

12. பனாமாத்திட்ட முடிவின்பின் ஏற்பட்ட

வளர்ச்சிப் பணிகளை விவரிக்க.

அறிவியல் வளர்ந்து கொண்டே வருகின்றது. மண்ணில் இருந்து விண்ணுக்குத் தாவி அதனையும் தன் காலடிக்கீழ்க் கொண்டுவரும் அளவில் வளர்கின்றது. இந்நிலைமையில் எந்தத் திட்டமும் முதற்கண் ஏற்பட்ட அளவிலேயே அமையும் என்பதற்கு இல்லை. அவ்வகையில் பனாமாத் திட்ட நிறைவின் பின் உண்டாய வளர்ச்சிகளைக் காண்போம்.

பனாமாப் பூட்டுக் கால்களும் அவற்றில் அமைக்கப்பெற்ற பொறிகளும்,படகுகளும், சிறு கப்பல்களும் போய்விடும் அளவுக்கே பயன்பட்டன. ஆனால், மிகப்பெரிய நீராவிக் கப்பல்களும், போர்க்கப்பல்களும் போய்வரவேண்டிய இன்றியமையாமை உண்டாயிற்று. அத்தேவைக்கு ஏற்றபடி கடற்காலை கேழவும், அகலமாக்கவும் வேண்டியதாயிற்று. அதற்காக நாள்தோறும் பணிகள் தவறாமல் நடைபெற்றன; நடைபெற்றுக் கொண்டும் இருக்கின்றன. செயலாட்சி, அமைப்பாட்சி, நிலஆட்சி, பொருளாட்சி, பொறியாட்சி, போக்குவரவாட்சி, பணியாட்சி, மன்பேராட்சி, மக்கள் நல ஆட்சி என்னும் பல்வகை ஆட்சிக் குழுக்கள் தனித்தனி - ஆனால் வளர்ச்சியில் ஒன்றுபட்டு அயராது உழைத்த வண்ணம் இருக்கின்றன. கொள்ளை நோய்க் கொடுமையைப் பனாமாவில் இருந்து மட்டுமென்ன பாருலகம் எங்கும் கூடத் தலைகாட்டாவண்ணம் செய்யத்தனி முயற்சி கொண்டுள்ளனர்.

பசிபிக் கடலில் உள்ள பல்போவாத் துறைமுகத்திலும், அட்லாண்டிக் கடலில் உள்ள கிறித்தோபல் துறைமுகத்திலும் பெரும் பெரும் கப்பல்கள் பல ஒரே சமயத்தில் தங்குவதற்கு ஏற்ற வாய்ப்புகள் செய்யப்பெற்றன. கப்பல் பணிப் பட்டறைகளும் கப்பல் கட்டுமான நிலையங்களும் அமைக்கப் பெற்றன. பணி