உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 29.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1. இளமையும் கல்வியும்

முன்னுரை: - ஓர் இடம் உயர்ந்த கட்டங்களாலோ ஓடும் ஆறுகளாலோ, நிமிர்ந்து நிற்கும் மலைகளாலோ, விரிந்து கிடக்கும் கடல்களாலோ மட்டும் பெருமை அடைந்து விடுவதில்லை. ஆங்குப் பிறந்த பெருமக்களாலேயே அழியாப் புகழ் அடை கின்றது; அவ்வகையில் இந்திய நாட்டுக்கு இணையில்லாப் புகழ் தேடித்தந்தவர்களுள் கவிஞர் தாகூரும் ஒருவர் ஆவர்.

கற்பனைவித்து:- கல்கத்தாவில் சீரோடு திகழ்ந்த தாகூர் குடியில் 1861 ஆம் ஆண்டில் தேவேந்திரநாத தாகூருக்குப் பதினான்காம் குழந்தையாகப் பிறந்தார் இரவீந்திரர். எளிய வாழ்வை விரும்பிய தேவேந்திரர் இரவீந்திரரையும் அவ்வாறே வளர்த்தார். ஆதலால் எளிய விளையாடுப் பொருள்கைளத் தாமே படைத்துக் கொண்டு வீட்டு முற்றத்திலும் தோட்டத்திலும் விளையாடிப் பொழுது போக்கினார். இவ்வெளிமையும், விளை யாட்டுப் படைப்பும் இரவீந்திரர் கற்பனைக்கு வித்திட்டன.

கற்பனைக்கு விருந்து:- சிறுவர் இரவீந்திரரை அண்ணன்மார் தங்கள் விளையாட்டில் சேர்த்துக் கொள்வது இல்லை. ஆதலால் வேலைக்காரர்களையோ, அன்னையையோ, அத்தையையோ, கணக்கர்களையோ இரவீந்திரர் நாடிச்செல்ல நேரிட்டது. அப் பொழுதில் அவர்களிடம் சிலச்சில கதைகளைக் கேட்டார்; கதைப் பாட்டுக்களையும் அறிந்தார்; இவை இரவீந்திரரின் கற்பனைக்கு விருந்தாயின.

இயற்கைக் கவர்ச்சி:- இரவீந்திரர் தனியே இருக்கம் பொழுது அவர் தம் கற்பனை உலகம் உண்மை உலகமாக மாறியது. பயன்படாமல் அவர்கள் வீட்டில் கிடந்த பல்லக்கில் இரவீந்திரர் ஏறி அமர்வார். அப்பல்லக்கு வானில் பறக்கும்; மலையையும், ஊரையும், ஆற்றையும் கடலையும் தாண்டும் எல்லாம் கற்பனையில் தான்! பச்சைப்புல், பனித்துளி, இளந்தளிர், மென்காற்று, மழை முதலிய இயற்கைப் பொருள்கள் இரவீந்திரரைக் கவர்ந்தது போலவே, மண்ணும் அதிலுள்ள பொருள்களும் கவர்ந்தன.