உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 29.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

22

இளங்குமரனார் தமிழ்வளம் - 29

கிடந்த கட்டிடங்களைக் கண்டு கலங்கினார். போரில் மடிந்த வீரர்களின் கல்லறைகளைக் கண்டு உருகினார். உலகத்து அறிஞர்கள் செய்த வரும் செயற்கருஞ் செயல்களை யெல்லாம் போர்ப் பேய் விழுங்கி விடுவதைக் கண்டு புண்பட்டார்.போரைத் தூண்டி விட்டவர் எங்கோ இருக்க, இன்னதென்று அறியாத மக்கள் படும் அவலங்களை எண்ணி நொந்தார். தம்மால் ஆன தொண்டுகளை அவ்வப்போது செய்தார். சீனா, இரசியா முதலான நாடுகளுக்குச் சென்று அறிஞர்களுடன் தொடர்பு படுத்திக் கொண்டார். பெருந்தலைவர்களுடன் இணைந்த அமைதிப் பணி புரிந்தார். அத்தகயருள் காந்தி யடிகள் தலையாயவர் ஆவர். அவருக்கு 'மகாத்மா' பட்டம் சூட்டிச் சிறப்புச் செய்தவரே தாகூர்தாம்.

ஒளிமிக்க உள்ளம்: உயிர்கள் அனைத்தின் மேலும் ஒப்பற்ற அன்பு செலுத்தினார் தாகூர். தனிப்பட்ட மனிதர் மேல் வெறுப்புக் கொள்ளாதவர் தாகூர். கொள்கைகளில் விரும்பத் தக்கவை, வெறுக்கத்தக்கவை இவை எனக் கருதுவதே அல்லாமல் கொள்கை யுடையார் மேல் விருப்பு, வெறுப்புக் காட்டாத பெரும் பாங்கு அவருடையது. உலகப் போர் அல்லலை நினைந்து உருகிய அவர் 1941 இல் தம் என்பதாம் ஆண்டு நிறைவு விழாக் கூட்டம் ஒன்றில் "நாகரிகத்திற்கு உண்டாகிய நெருக்கடி" எனப் பேசினார். அழிவை மூச்சாகக் கொண்ட நாகரிகம் அன்று வாழ் நாளெல்லாம் பறை யறைந்தார். அவர் உள்ளம் அத்தகையது.

முடிவுரை:- தாகூர் தண்ணொளி பரப்பும் பேரொளிச் சுடர். அச்சுடரொளியால், வழிபிடித்துக் கொண்டு உலகம் செல்லும் நாளே உய்யும் நாள். அந்நாள் வருவதாக!