உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 29.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கவிஞர் தாகூர்

21

கையாள முடியாததாகவும் அசைக்க இயலாததாகவும் இருக்கின்றது. நாளுக்கு ஒரு பாட்டு எழுதி முடிக்க இயலுமானால் என் வாழ்வு ன்பமாக நடைபெறும்" என்று கூறும் வரிகளில் தாகூரின் கவிதை ஆர்வம் நன்கு புலப்படும்.

நாடகத் தொண்டு:- இளமையிலேயே வீட்டில் அண்ணன்மார் நடிக்கக்கண்டு களித்தது நாடகக்கலை. மேடையை நெருங்க முடியாதிருந்த நிலைமாறித் தாமே நாடகம் இயற்றவும், இயற்றிய நாடகத்தைப் பயிற்று விக்கவும். தாமே நடிக்கவும் ஆகிய நிலைமைகள் உண்டாயின. சாந்தி நிகேதனப் பாடத்திட்டங்களில் நாடகத்திற்குச் சிறந்த இடம் தரப் பெற்றது. "வால்மீகி தீபம்" என்னும் நாடகத்தைத் தம் பத்தொன்பதாம் வயதில் எழுதினார். தாமே வால்மீகராக நடித்தார். மிக முதிர்ந்த காலத்திலும் நாடகப் பற்றை விட்டாரல்லர்.

கற்பனை வளம்:- கற்பவரின் மனக்கண்ணில் அழுத்தமாக நிறுத்தத் தக்க கற்பனைச் சொல்லோவியங்களைப் படைத்தலில் வல்லவர் தாகூர். கடலைக் காண்கிறார் தாகூர். கற்பனை வளம் பொங்குகிறது; "வெட்ட வெளியில் கிடக்கம் கடல் அலைந்து புரண்டு நுரை கக்குகிறது. அதைப் பார்க்கும் போதெல்லாம் கட்டுண்டு வருந்தும் பெரிய பூதம் போன்ற தோற்றம் மனதில் எழுகிறது. நிலம் கடலின் வயிற்றில் இருந்து பிறந்த குழந்தை. தாயின் அரியணையைப் பற்றிக் கொண்டது. அது முதல் பெற்ற தாய் பித்துப்பிடித்தவளாய், நுரை நுரையாய்க் கக்குகிறாள். ஓயாமல் அழுது விம்முகிறாள். தன்னந்தனியே புயலில் சிக்குண்டு வருந்திய லியர் மன்னன் போல் துயரடைகிறாள்".

குழந்தை நெஞ்சம்:- பெருமக்கள் குழந்தை நெஞ்சம் உடையவர். தாகூர் அதற்கு விதிவிலக்கு இல்லை. தமக்குப் புகழ் வருவது கண்டு வருந்தினார் தாகூர்.என் ஆடைகளின் கரைகளைத் தொடுவதற்காகவும், அதை முத்தமிடுவதற்காகவும் மக்கள் சூழ்ந்து நெருங்குவது எனக்குக் கவலையை உண்டாக்கிறது.நான் வணங்கத் தக்க மக்கள் அவர்களிடத்தே பலர் இருக்கின்றனர் என்பதை நான் எப்படி உணர்த்துவது” என்று ஏங்கினார். குழந்தைகளைப் பற்றி உருக்கும் படியாகப் பாடிய புலவர்களுள் உலகில் முதலிடம் பெறுபவர் தாகூர் என்பர். "பிறைமதி" என்னும் தொகுப்பில் அவர்தம் குழந்தைப் பாடல்கள் உள.

அமைதி வேட்கை:- போரை வெறுத்தவர், கண்டித்து உரைத்தவர் தாகூர். போர் முடிந்தபின்னர் பிரஞ்சு நாட்டிற்கும், செர்மனி நாட்டிற்கும் சென்ற கவிஞர் ஆங்குப் பாழடைந்து