உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 29.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

8. உள்ளத்தின் ஒளி

"உள்ளுவ தெல்லாம் உயர்வு உள்ளல்" என்றார். திருவள்ளுவர். உள்ளத்தே ஒளி யுண்டாயின் வாக்கினிலே ஒளியுண்டாகும் என்றார் பாரதியார். 'ஊழினை உருக்கி உள்ளொழி பெருக்கி' என்றார் மாணிக்க வாசகர். "உள்ளொளி”யைத் தெள்ளிதின் ஆராய்ந்து எழுதினார். திரு.வி.க. "உள்ளொளி" வாய்ந்த மாந்தர் உலகில் அரியர். தாகூர் அவ் வரியருள் அரியராகத் திகழ்ந்தார்.

உள்ளொளி :- தாகூர் கவிஞர் கதை ஆசிரியர்; நாடக ஆசிரியர்; சைக் கலைஞர்; நடிகர்; ஓவியர் இயற்கைச் சுவைஞர். இயற்கை வாழ்வினர்; இறையருட் பேற்றாளர் அவர்தம் படைப்புக்கள் அனைத்தும் 'உள்ளத்தின் ஒளி”யை உலகுக்கு அறிவிப்பன. நூலாகவும், இதழாகவும் வெளிவந்து உலகுக்கு ஒளிபரப்பின.

படைப்பின் மாண்பு:- தம் வாழ்க்கையில் கண்ட எளிய நிகழ்ச்சிகளையும், கேட்ட எளிய, செய்திகளையும் அரிய படைப் பாக்குதலில் தேர்ந்தவர் தாகூர். அவர் கற்பனை ஒளி பட்டதும் எளிய காட்சிகளும், செய்திகளும் அரிய ஒளி வீசிச் சுடர்ப்பிழம் பாகக் காட்சி வழங்கின. கதையாயினும் பாட்டாயினும் எழுதி முடிக்கப் பெற்றதும் நண்பர்களை அழைத்து உடன் வைத்துக் கொண்டு யாழிசை போன்ற தம் குரலால் படிப்பார்; நாடகம் ஆயின் நடித்துக் காட்டவார்.

பாடல் தொண்டு

பாடல் தொண்டு செய்வதே வாழ்நாள் கடமையாகக் கொண்டவர் தாகூர் என்பதில் தவறு இல்லை. கீதாஞ்சலிக்கு நோபெல் பரிசு பெற்ற பின்னர் ஓய்வற்ற பணிகள் மிகுந்தும் பாடல் தொண்டு செய்வதில் அவர் தவறவில்லை. "பக்கம் பக்கமாக உரைநடை எழுதிய போதிலும் ஒரு பாட்டு எழுதுவதற்கு ஈடான மகிழ்ச்சி உண்டாவது இல்லை. ஒருவர் தம் கைவிரல்களால் தொட்டு எடுக்கக் கூடியவைபோல் பாட்டுக்கள் அமைகின்றன. ஆனால் உரைநடை என்பது ஒட்டாத பொருள்களை ஒரு கோணிப்பை நிறைய அடைத்திருப்பது போல் கனமாகவும்,