உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 29.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கவிஞர் தாகூர்

19

நூல்கள் வாங்கப் பெற்றன. பொழுது போக்கு நிகழ்ச்சிகள், விளையாட்டுக்கள், நாடகங்கள் ஆகியன அவ்வப்போது மக்கள் மகிழ்ச்சிக்காக நடத்தப் பெற்றன.

உரிமைக் கல்வி:- பக்கத்துக் கிராமங்களில் பயிலும் மாணவர்கள் திருநிகேதனில் வந்து ஐந்தாறு ஆண்டுகள் பயின்றனர். உலகச் செய்திகளும், வாழ்க்கை வரலாறுகளும், வங்க இலக்கியமும் கற்பிக்கப் பெற்றன. ஆனால் பொதுத் தேர்வு என்பது அங்கு இல்லை. "உரிமை உணர்ச்சி இல்லாத கல்வி, கட்டாய உணவு போல் தீமை தரும்" என்பது கவிஞர் கொள்கை. அதனைத் தம் கழகத்தில் செயல் திட்டமாகக் காட்டினார்.

முடிவுரை:- தாகூர், மக்கள் அமைதியும் இனிமையுமான வாழ்வு வாழக் கருதினார். அதற்கு ஏற்ற செயல் திட்டங்களைச் சாந்தி நிகேதனில் உருவாக்கி வளர்த்தார். அதன் செயல் மணம் பக்க மெல்லாம் பரவி நலம் செய்வதாயிற்று.