உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 29.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

18

இளங்குமரனார் தமிழ்வளம் -29

தமக்குள் உண்டாகும் சிக்கல்களைத் தாமே தீர்த்துக் கொள்ளத் தக்கவர்களாகவும் மாணவர்களை உருவாக்கினார். பிறரை மதித்து நடக்கும் பான்மையை நன்கு வளர்த்தார்.

விசுவ பாரதி:- 'உலகம் ஒருகுடி' என்பதை உணர்ந்தவர் தாகூர். அதனால் 1918 இல் சாந்தி நிகேதனத்தில் விசுவபாரதி என்னும் உலகக் கலைக் கழகத்தை உருவாக்கினார். அங்கு உலகப் பெருமக்கள் பலரும் வருகைதந்து அளவளாவ வாய்ப்புச் செய்தார். இந்தியாவில் உள்ள பல மாநிலத்துக் கலைகளும் சாந்தி நிகேதனத்தில் இடம் பெற்றன. சீனா, சப்பான் முதலான கீழை நாட்டுக் கலையும் ஐரோப்பா முதலிய மேலைநாட்டுக் கலைகளும் ஆங்கு இடம் பெற்றன. சமயம் கடந்த, இனம் கடந்த, நாடு கடந்த பொதுத் தன்மைக்குச் சாந்தி நிகேதனம் இருப்பிடம் ஆயிற்று.

திருநிகேதன்:- கிராமங்கள் பெருகியுள்ள இந்திய நாட்டில் கிராமங்கள் வளம் பெறாவிட்டால் நாடு முன்னேற முடியாது என கண்டார். அதற்காகத் தம் மைந்தர் இரவீந்திர நாதரை அமெரிக்கா வுக்கு அனுப்பி உழவைப்பற்றி மூன்று ஆண்டுகள் கற்றுவரச் செய்தார் விசுவபாரதியில் கற்பிக்கும் கலைகளில் கிராமத் தொண்டு என்பதையும் ஒன்றாக்கினார்.சாந்தி நிகேதனத்திற்கு அருகில் இருந்த சுருள் என்னும் ஊரில் இருந்த தம் விட்டைத் ‘திருநிகேதன்' எனப்பெயர் சூட்டிக் கிராமத் தொண்டுக்கு உரிய தலைமை நிலையம் ஆக்கினார். அங்கே நூலகமும் அலுவலகமும் அமைத்தார். தரிசாகக் கிடந்த அப்பகுதி வளமான பயிர்நிலமாக மாறியது.

கூட்டுறவுக் கழகம்:- திருநிகேதனில் கூட்டுறவுக் கழகம் அமைக்கப்பெற்றது அங்குக் குடியிருந்த அனைவரும் உறுப்பினர் ஆயினர்.கூட்டுறவுக் கழகக் கட்டணத்தின் ஒரு பகுதி மருத்துவக் கட்டணம் ஆக்கப் பெற்று மருத்துவர்க்குத் தர ஏற்பாடாயிற்று. ஆதலால் மருத்துவர் நோய் வராமல் பார்த்துக் கொள்வதில் மிக அக்கறை காட்டினார். மக்களுக்கு நோய் வராவிட்டாலும் தமக் குரிய தொகை கிடைக்க வகை இருந்தால் நோய் வராமல் தடுக்க மருத்துவர் முயல்வது இயல்பு அல்லவா!

தொண்டர் படை:- கிராமப் பள்ளிக்கூட மாணவர் களுக்குத் தொண்டர்படை அமைக்கப் பெற்றது. கிராமத்து மக்களுக்குத் துன்பம் நேர்ந்த போதெல்லாம் அந்தத் தொண்டர் படை உதவியது. உடலையும் உள்ளத்தையும் வளர்த்துப் போற்றினர் தொண்டர் தொண்டர்கள் தத்தம் வீட்டில் காய்கறித் தோட்டம் அமைத்தல் வேண்டும். பொதுத்தோட்டத்திலும் பாடுபட வேண்டும். அதன் பயனால் கிடைத்த தொகையைக் கொண்டு பள்ளிக்கூட