உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 29.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1. ஆல்பர்ட் சுவைட்சரின் இளமையும்

கல்வியும்

உலகின் நன்மைக்காகப் பிறந்த பேரருளாளர்கள் பலர்; செயற்கருஞ் செயல் செய்த சீரிய தொண்டர்கள் பலர்; இறையன் பில் இணையற்று விளங்கியவர்கள் பலர்; இத்தகையவர்களுள் குறிப்பிடத்தக்க ஒருவர் ஆல்பர்ட் சுவைட்சர்.

ஆல்பர்ட் சுவைட்சர் 1875ஆம் ஆண்டு சனவரித் திங்கள் 14ஆம் நாள் ஐரோப்பாவைச் சேர்ந்த கேயர் சுபர்க் என்னும் ஊரில் லூயி சுவைட்சர் -என்பவரின் இரண்டாம் திருமகனாராகப் பிறந்தார். அவர் பிறப்பால், பிறர்க்கென வாழ்ந்த பெருமக்கள் பிறந்த நாள்களுள் சனவரித் திங்கள் பதினான்காம் நாளும் ஒருநாள் ஆயிற்று.

ஆல்பர்ட் சுவைட்சரின் தந்தையார் லூயி சுவைட்சர் கிறித்தவ சமய போதகராகப் பணிசெய்தார். 'ஆர்கன்' என்னும் இசைக் கருவியை மீட்டுதலில் தேர்ச்சி பெற்றிருந்தார். அவர்தம் முன் னோரும் உடன் பிறந்தவர்களும் இசைத் தேர்ச்சியும் இறையன்பும் மிக்கவராக இருந்தனர். ஆகவே இறையன்பும் கவர்ந்து ஆட் கொண்டனர்.

ஐந்தாம் அகவையிலேயே ஆல்பர்ட்டுக்கு அவர் தம் தந்தையார் பியானோ கற்பித்தார். ஏழாம் அகவையிலேயே தம் இசையாசிரியை பாராட்டும் திறம் பெற்றார். எட்டாம் அகவையில் ஆர்கன் இசைப்பதில் ஈடுபட்டார்! இவ்வாறு இசையால் 'இசை' பெற்றுத் திகழ்ந்தார்.

லூயிசுவைட்சர் கேயர்சுபர்க்கில் இருந்து கன்சுபர்க் என்னும் இடத்திற்குச் சமய போதகராக மாற்றப் பெற்றார். ஆகவே கன்சுபர்க்கில் தான் சுவைட்சரின் இளமைக் கல்வி தொடங்கியது. எளிய சூழ்நிலையில் அமைந்த கன்சுபர்க் பள்ளிக்குச் சென்ற சுவைட்சர், தாமும் அந்த எளிமையை மிக விரும்பிப் போற்றினார். உடன் பயிலும் உழவப் பிள்ளைகளைப் போலவே உடை உடுத்தார்.