உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 29.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

10. ஆல்பர்ட் சுவைட்சரின் நூல்வளம்

உள்ளத்தால் பொய்யாது ஒழுக்கியவர் ஆல்பர்ட் சுவைட்சர். இவர் நூலறிவு, பட்டறிவு, நுண்ணறிவு ஆயவற்றால் கண்டறிந்தவை நூல்வடிவிலும், கட்டுரை வடிவிலும், உரைவடிவிலும் வெளிப் பட்டன. உலகுக்கு ஒளிகாட்டின. அவற்றுள், இவர் ஆக்கிய நூல்களில் திகழும் அரிய பொருள்களைப் பற்றிச் சிறிது காண்போம்.

'பால் அடிகளின் பத்திநெறி' என்பது சுவைட்சர் எழுதிய நூல்களுள் ஒன்று. இயேசு நாதர் வாழ்வு கட்டுக்கதை அன்று என்றும், அவர் வழங்கிய அருள்மொழிகள் புத்தொளி யுடைவை என்றும், ஓர் உயிர் தன்பாலும் தன்னைச் சூழ்ந்துள்ள உயிர்களின் பாலும் ஈடுபாடு கொள்வதே பக்திநெறி என்றும், மனிதன் தன்னைப்பற்றி அக்கறை கொள்ளாது இறைவனுடன் இரண்டறக் கலக்க ஆவலுறுவதே பாலடிகளின் உள்ளம் என்றும் அந்நூலில் விளக்கினார்.

பாக் என்னும் என்னும் இசைக் கவிஞரைப்பற்றி இவர் எழுதிய நூலில் அப்புலவர் உள்ளத்தில் நிறைந்திருந்த இசையை, உணர்வுடன் கையாளும் திறத்தை விளக்கினார். 'ஆர்கன்' கருவியை எவ்வாறு அமைக்க வேண்டும் என்பதுபற்றி ஒரு நூல் எழுதினார். இசை வல்லார்க்கு இவ்விரு நூல்களும் எளிய விருந்தாயின.

று

நாகரிகத்தின் தத்துவம் என்னும் நூலிலே மேல் நாடுகளிலும் கீழ்நாடுகளிலும் 'உலகம்' பற்றி வெளிப்படுத்தப் பெற்ற பல்வே கொள்கைகளை ஆராய்ந்து மக்களின் வாழ்வுநெறியை இவை எவ்வாறு அமைத்தன என்பதை வரலாற்று முறையில் வெளியிட்டார்.

காட்டுமிராண்டி தன் குழுவுக்கு உதவி செய்தலே தன் கடமை என உணர்கிறான். பிறர்க்கு உதவி செய்வதைக் கருதாமல் 'அவன் என் உடன் பிறந்தான்' என ஒதுக்குகின்றான்.ஒவ்வொரு மனிதனும் நம்முடைய அருளுக்கும் அக்கறைக்கும் உரியவன் என்றால் நிலை நாகரிகம் உடையதெனக் கூறும் சமுதாயத்திலும்