உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 29.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பிணி தீர்க்கும் பெருமான்

53

காணுதல் அரிதாகின்றது. இனம், சமயம், நாடு என்பன எதிரிடு கின்றன. அண்டையில் வாழ்பவனையும் அயலானாகக் கருதத் செய்கின்றன. இந்நிலை மாற ‘யாவரும் கேளிர்' என்னும் அடிப்படை அறம் உண்டாதல் வேண்டும். இதுவே மக்கட் பண்பு. 'யாவரும் கேளீர்' என்னும் பண்பு பின்னர் 'யாவும் கேளே' என்று விரிவடைய வேண்டும். 'எவ்வுயிர்க்கும் அன்பு காட்டு' என்னும் நீதி, ஒழுக்க நெறியின் ஒளியாம். 'நான் வாழ வேண்டும்' என்னும் கொள்கை மற்றோருயிர் 'நான் வாழ வேண்டும்' என்னும் கொள்கைக்கு மாறுபட்டதாக இருத்தல் கூடாது. 'நான் உயிர்வாழ விரும்புகிறேன். என்னைச் சுற்றிலும் உள்ளதும் உயிர் அதுவும் என்னைப்போலவே வாழ விரும்புகிறது' என்பதை உணர வேண்டும். இக்கருத்துக்களை விளக்கி 'உயிர்ப்பத்தி' என்னும் நூலை உருவாக்கினார் சுவைட்சர்.

உலக சமய கோட்பாடுகளை ஆராய்ந்த சுவைட்சர் இந்திய சித்தாந்தங்களை ஆராய்ந்தார். இந்திய சித்தாந்தமும் அதன் வளர்ச்சியும் என்னும் நூலை ஆக்கினார். அதில் வைதிகம், சமணம், பௌத்தம் முதலிய சமயங்களையும் கீதை, திருக்குறள் முதலிய நூல்களையும் விரிவாக ஆராய்கிறார். குறளைப்பற்றி அவர் கூறியுள்ள கருத்துக்கள் மிகச் சிறப்புடையனவாம்.

'உலகம் மாயை என்று கருதிய இந்தியக் கருத்துலகில் வள்ளுவர் தம் அறிவுச் சுடரால் நல்லொழுக்க நெறிபரவ விட்டுள்ளார். பகவத்கீதை இறைவனிடத்தில் மனிதன் அன்பு செலுத்த வேண்டும் என்ற குறிக்கோளைக் கூறுகிறது. மனிதன் மனிதனுக்குக் காட்டும் அன்பின் வழியாக இறைவனை அடையலாம் என்ற கருத்து அந்நூலில் கூறப்படவில்லை. அன்பு அருள் தொண்டாக மலர வேண்டும் என்று திருக்குறள் ஒன்றே வலியுறுத்துகிறது.

'மனுவின் நூலில் மாயை ஓங்கி நிற்கிறது; திருக்குறளில் அஃது ஒடுங்கிக் கிடக்கிறது. கைம்மாறு இல்லை எனினும் நல்ல செயலைச் செய்வதால் மனநிறைவு உண்டாம். ஆகவே நல்ல செயல் வேண்டும் என்று திருக்குறள் அறிவுறுத்துகிறது.

ஒழுக்கமே மனிதன் உயர்ந்த குறிக்கோளாக உயர்ந்த குறிக்கோளாக இருக்க வேண்டும் என்பதை வள்ளுவர் துணிந்து வற்புறுத்தியுள்ளார். மனிதன் தனக்குத்தானே செய்ய வேண்டிய கடமைகளையும், பிறர்க்குச் செய்ய வேண்டிய கடமைகளையும் பண்பாடும் அறிவும் தோன்றக் கூறியுள்ளார். உலகத்தில் காணக் கிடைக்கும் இலக்கியப் பரப்புள்