உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 29.pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1. அருந்தவத்தோன்

இறைவன் அருளாளன்; அழகே உருவம் ஆனவன்; அவன் அருள் அழகிலே தோய்ந்து தோய்ந்து பாடிய புலவர் பெருமக்கள் பலப்பலர். அவர்களுள் பெருந்தேவனார் என்பார் ஒருவர்.

சிவபெருமான் திருப்பெயர்களுள் ஒன்று பெருந்தேவனார் என்பது. அப்பெயரைத் தம் பெயராகத் தாங்கிய சங்கப் புலவர் ஒருவர் இருந்தார். அவர் சிவபெருமானைப் பற்றிப் பாடிய இனிய பாடல்ஒன்று புறநானூற்றில் கடவுள் வாழ்த்தாகத் திகழ்கின்றது.

சிவபெருமானது உருவக் காட்சியிலே உள்ளந்தோய்ந்தார் பெருந்தேவனார்; முடிமுதல் அடிவரை கண்டுகண்டு, எண்ணி எண்ணிக்களிப்படைந்தார்; கவியாகப் புனைந்து கற்பவர் நெஞ்சங் களை அக்கடவுட் காட்சியிலே ஊன்றுமாறு செய்தார்.

"கார் காலத்தில் மலர்ந்து மணம் பரப்பும் கொன்றை மலரைத் தன் திருமுடிக் கண்ணியாகக் கொண்டுள்ளான் சிவன். கண்ணியாக மட்டுமோ அக்கொன்றை திகழ்கின்றது? மார்பில் திகழும் தாராகவும் அக்கொன்றையே உள்ளது. சிவனது செவ்வண்ண மார்பிலே மணி பதித்தால் போல அழகு செய்கின்றது அது.

"வெண்ணீற்றை விரும்பி அணியும் சிவன் தூய வெள்ளேற்றின் மேல் (காளையின் மேல்) ஏறி வருகின்றான்! அம்மட்டோ? அந்த ஏறே அவனுடைய சிறப்புமிக்க கொடியாகவும் விளங்கிப்பட்டொளி வீசுகிறது.

"செந்தழல் மேனிச் சிவபெருமான் கழுத்திலே கறை என்ன? ஆம்! நீலகண்டன் அல்லனோ அவன்! அது கறையா? இல்லை! இல்லை! செவ்வண்ணத் திருமேனியில் எழுந்த கருமணி! மண்ண வரும் விண்ணவரும் போற்றும் மாமணி. ஏன்? அமுது வேண்டி அமரர் பாற்கடலைக் கடைந்தபோது முதற்கண் கிடைத்தது நஞ்சு! இறவாத வாழ்வை விரும்பி அமுதுவேண்டி நின்றோர்க்குக் கிடைத்தது. எளிதில் இறப்பளிக்கும் நஞ்சு! சாவவா பாற்கடல் கடைந்தனர்? சாவாமை நாடிய அவர்கள் சங்கரனைச் சார்ந்து நின்று வேண்டினர். நலிவு செய்யும் நஞ்சை அள்ளி உண்டு