உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 29.pdf/86

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1. சூயசு

-

பனாமா

-

திட்டங்களுக்கும்

தமிழகத்துக்கும் உள்ள தொடர்பு பற்றித்

தொகுத்து எழுதுக.

மாந்தர் இனத்தின் அயரா முயற்சியால் அமைந்த பெருந் திட்டங்கள் பல. அவற்றுள் சூயசு, பனாமாக் கடலிணைப்புத் திட்டங்கள் சிறப்பாகக் குறிக்கத்தக்கன.இவ்வரும்பெருந் திட்டங் களுக்கும், தொல்பழம் பெருநிலமாம் தமிழகத்திற்கும் உள்ள தொடர்புகள் குறித்து இக்கட்டுரையில் காண்போம்.

உலக ஒருமைப்பாடு என்பது தமிழர்க்குப் புதுப்பொருள் அன்று. மிகு பழம் பொருளாம். "ஒன்றே குலம், ஒருவனே தேவன்" என்பது பழந்தமிழ்ப் பண். உலகம் ஒன்று ஆதலால் அதன் தலைவனான இறைவனும் ஒருவனே என்பது அவர்கள் தெளிவு. காலத்தையும் இடத்தையும் கடந்து தமிழர் கண்ட கனவை, அக்காலத்தையும் இடத்தையும் வென்றே உலகம் காண முடியும். அவ்வாறே கண்டது.

விசை ஊர்திகள், நீராவிக் கப்பல்கள், வான்கலங்கள், தொலைபேசி, தொலை அச்சு, கம்பி இல்லாத்தந்தி, தொலைக்காட்சி, சேண்கதிரி முதலாய அறிவியற் புதுமைகள் உலகத்தைச் சுருக்கி நெருக்கத்தில் கொண்டு வந்துள்ளன. இவற்றைப் போலவே சூயசு, பனாமாக் கடல் இணைப்புத் திட்டங்களும் உலகத்தைச் சுருக்க உதவியுள்ளன. ஆகவே, உலக நெருக்கம் கருதிய தமிழகக் கனவு, க்கடற்கால் ணைப்புக்களால் நனவாகியுள்ளதென்பது உண்மையாகும்.

எகிப்து நாட்டின் கண்ணோட்டம் கீழ்த் திசையில் இருந்தது. கீழ்த்திசை நாடுகளுடன் தொடர்புகொள்ள எகிப்தியர் விரும்பினர். கி.மு. 2000 ஆண்டுகளுக்கு முற்பட்டே எகிப்தியர் ‘பண்ட்' என்ற கீழ்த்திசை நாட்டுடன் கலை, வாணிகத் தொடர்பு கொண்டிருந்தனர். அந்நாட்டின் துறைமுகமான ‘ஓபீர்' என்ற