உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 29.pdf/87

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

76

இளங்குமரனார் தமிழ்வளம் - 29

இடத்தில் இருந்து அவர்கள் தங்கம், தேக்கு, அகில், மயிலிறகு முதலியவற்றைக் கொண்டு வந்துள்ளனர். அத் தொடர்புடைய நாடே 'தம் பழந் தாயகம்' என்றுகூட எண்ணினர். ஆதலால் எகிப்தியர் கண்ணோட்டம் கீழ்த்திசை நோக்கி இருந்தது இயல் பேயாம்.

,

ப் 'பண்ட்' நாடும், 'ஓபீர்' துறையும் எங்கே உள்ளன என்று ஆராய்ச்சியாளர்கள் அரேபியாவிலும், ஆப்பிரிக்கா விலும் தேடினர். ஆனால் அங்குக் காணவில்லை. பாண்டி நாடே அப் 'பண்ட்' என்றும்,அந்நாட்டில் இருந்த 'உவரி' என்னும் துறைமுகமே 'ஓபீர்' என்றும் கால்டுவெல் பெருமகனார் தெளிவு செய்தார். ஆம்! சிந்து வெளி நாள்முதல் தேக்கு, மயிலிறகு, அகில், தந்தம், தங்கம் முதலிய பொருள்கள் தமிழகத்தில் இருந்து உலகெங்கும் போயின. பொருள்கள் மட்டுமோ போயின? தமிழ்ப் பெயர்களும் அத் தமிழ்நாட்டுப் பொருள்களுடன் போயின. இந்நாளிலும் உலகெங்கும் அத்தமிழ்ப் பெயர்களே பல வகையாக மருவி வழங்குவது அதற்குத் தக்க சான்றாகும். இத்தகைய வளமிக்க தமிழகத்துடன் வாணிகம் செய்யும் ஆவலில் இருந்தே எகிப்தியரின் சூயசுக் கடற்கால் கனவு உருவாயிற்றாம்.

மற்றொரு வகையாலும் தமிழகம் சூயசுக் கடற்கால் தோன்றத் துணையாயிற்று. 15ஆம் நூற்றாண்டில் இருந்து 19ம் நூற்றாண்டு வரை இந்தியாவிற்கு வர நன்னம்பிக்கை வழி ஒன்றே இருந்தது. இவ்வழியையும் பிரிட்டீசாரே பயன்படுத்த முடிந்தது.ஆகவே புது வழி ஒன்று காண்பதற்காக மேலை நாட்டார் பெரிதும் முயன்றனர். அம்முயற்சியின் விளைவே சூயசுக் கடற்காலாக உருவாயிற்று.

தமிழக வாணிகத் தொடர்புபற்றிய ஆவலே சூயசுத் திட்டத்தை உருவாக்கியது போலவே பனாமாத் திட்டத்தையும் உருவாக்கியது. இந்தியாவுக்குப் புதுவழி காண மேலை உலகம் முயன்ற பொழுதில் உலகம் உருண்டை என்னும் எண்ணம் அரும்பியிருந்தது. ஆதலால் மேற்கே சென்றால் இந்தியாவின் கிழக்குக் கரையை அடையலாம் என்னும் துணிவுடன் கொலம்பசு என்னும் கடலோடி முயன்றார். அவர் இந்தியாவைக் காண்பதற்குப் பதிலாக அமெரிக்காவைக் கண்டார். அவரே இந்தியாவுக்கு மேல்திசை வழிகாண முயன்று ஆத்திரேலியாவைக் கண்டார். தென்கிழக்கு ஆசியாவைக் கண்டு அதனையே இந்தியா எனத் தவறாகக் கருதிக் கொண்டார். செவ்விந்தியர். மேற்கிந்தியத்