உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 29.pdf/88

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இரு கடற்கால்கள்

77

தீவுகள், கிழக்கிந்தியத் தீவுகள் என்பன இவற்றை விளக்கிக் காட்டும் சின்னங்களாம்.

பனாமாக் கடல் இணைப்புக்கும், அதன் வரலாற்றுக்கும் தாயகமாக இருப்பது அமெரிக்கா. அவ்வமெரிக்காக் கண்டமே தமிழகத்துடன் வாணிகம் செய்ய எழுந்த ஆவலின் பரிசேயாம். ஆதலால், தமிழகக் கனவால் எழுந்த அமெரிக்க நாட்டிலே அத்தமிழகக் கனவே பனாமாக் கடலிணைப்பையும் உருவாக்கிற்று என்பது நினைவுகூரத் தக்கதாம்.

சூயசு, பனாமாத் திட்டங்கள் உலக வரலாற்றைத் தம் தளமாகவும், வளமாகவும் கொண்டுள்ளன. இவ்விரண்டின் வரலாற்றின் மீதும் தமிழகத்தின் கனவொளியும் புகழ் ஒளியும் பரவிக் கிடக்கின்றமை நமக்குப் பெருமையளிக்கின்றன. "நன்றே நினைமின் நமரங்காள்" என்பது நம் முன்னோர் ஒருவர் வாக்கு!