உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 29.pdf/89

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2. "ஓருலகச் சாதனைகள்" என்பது பற்றி

எழுதுக.

உலகத்தை ஒரே குடும்பமாக்கி வாழ்வதற்கு உயர்ந்த பெரு மக்கள் எண்ணினர். அரும்பெருஞ் செயல் வீரர்கள் முனைந்து செயலாற்றினர். அத்தகு செயற்பெருஞ் சாதனைகளுள் சூயசு, பனாமாக் கடலிணைப்புத் திட்டங்கள் குறிப்பிடத்தக்கவையாம்.

உலகம் பலவகைப் பெருங்காப்பியங்களையும் வீரகாவியங் களையும் தன்னகத்துக் கொண்டுள்ளது. ஆனால் செயல் என்னும் அரங்கத்திலே தீட்டிக் காட்டப்பெற்ற சீரியவண்ண ஓவியப் பெருங்காவியங்களாகச் சூயசு, பனாமாக் கடலிணைப்புத் திட்டங்கள் உள்ளன. அவற்றுக்கு ஒப்பான வீரகாவியங்கள் உலகில் இல்லை என்றே துணிந்து கூறலாம்.

சூயசு, பனாமா என்பன இயல்பாகவே கடல் பகுதிகள் அல்ல. மிக ஆணித்தான காலம்வரை நிலப்பகுதிகளாகவே இருந்தன. மாந்தன் நிலத்தைப் பிளந்தும், மலையை உடைத்தும் கடலோடு கடலைக் கலக்கவிட்டு உலகக்கடல் வழியைப் படைத்துள்ளான். உலகப் பேரளவில் சுருக்கியுள்ளான்.

சூயசுத் திட்டம் பழைய உலகைச் சார்ந்தது. பனாமாத் திட்டம் புதிய உலகைச் சார்ந்தது. சூயசுத் திட்டத்தில் நாலாயிர ஆண்டு உலக வரலாறு பின்னிப் பிணைந்துள்ளது. பனாமாத் திட்டத்தில் கடந்த நானூறு ஆண்டு நாகரிக உலக வரலாற்றின் தடம் அழுத்தமாகப் பதிந்துள்ளது. இவ்விரண்டு திட்டங்களும் உலக வரலாற்றின் நிலைக்களங்களாக அமைந்துள்ளன.

ஆசியா, ஐரோப்பாக் கண்டங்களில் இருந்து நடுக்கடல், செங்கடல் இவற்றால் தனிப்பெரு நிலமாகப் பிரிக்கப் பெற்றிருப்பது ஆப்பிரிக்கா. ஆனால் ஆசியாவில் இருந்து முழுமையும் ஆப்பிரிக்கா பிரிக்கப்பட்டு விடவில்லை. ஒடுக்கமான ஒருநில இடுக்கு அவற்றை இணைக்கும் நிலப்பரப்பாக உள்ளது. இந்நில இடுக்கே சூயசு நில