உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 29.pdf/90

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இரு கடற்கால்கள்

79

இணைப்பு. இதனை வெட்டி அகழ்ந்தே கடலிணைப்புத் திட்டத்தை மாந்தர் இனம் நிறைவேற்றியது. இத்திட்டம் 19-ஆம் நூற்றாண்டின் சாதனையாம்.

அமெரிக்கா தென்வடலாகக் கிடக்கிறது. அதன் இரு பகுதிகள் தென்அமெரிக்கா, வடஅமெரிக்கா என்பன. ஒரே கண்டம் எனினும் தனித்தனிக் கண்டங்கள் போலப் பிரிந்தே கிடக்கின்றன. ஆயினும் முற்றிலும் பிரிந்து பட்டுவிடவில்லை. அங்கேயும் நீண்டு ஒடுங்கிய ஒருநில இடுக்கு உள்ளது. அந்நில இணைப்பே பனாமா நிலஇணைப்பு. இதனை அகழ்ந்தே பனாமாக் கடலிணைப்புத் திட்டத்தைப் புத்துலக வீரர்கள் படைத்தனர். இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் நிறைவேற்றப்பட்ட இணையற்ற சாதனை இது.

உலகின் வடகோடியும் தென்கோடியும் துருவப்பகுதிகள். அவை உயிர்களின் வாழ்வுக்கு இடந்தராத பனிப்பாழ் வெளிகள் - பனிப்பாறைகள். பனிப்புயலும், சூறைக்காற்றும் எப்பொழுதும் உண்டு. ஆதலால் வடதென்துருவப் பகுதிகள் போக்கு வரவுக்குத் தக்கவை அல்ல. அவ்வாறே வட, தென் கடல்களும் போக்குவரவுக்குத் தக்கவை அல்ல. ஆகவே உலகமா கடல்கள் ஐந்தனுள் பசிபிப்மாகடல், அட்லாண்டிக் மாகடல், இந்துமாகடல் ஆகிய மூன்று மாகடல்களிலேயே போக்குவரவு நடத்த முடியும்.

ஆசியா, ஐரோப்பா, ஆப்பிரிக்கா நிலப்பரப்பு உலகை இருவேறாகப் பிரித்து விடுகின்றது. அதன் வடகோடி வடகலையும், தென்கோடி தென்கடலை ஒட்டியும் கிடக்கின்றன. இந்நிலையில் ஆசியா ஐரோப்பாப் பரப்பில், ஆசியாவை ஆபிரிக்காவுடன் இணைக்கும் சூயசு நில இடுக்கை வெட்டிக் கடல் இணைப்புச் செய்தமையால் மேற்கு உலகும் கிழக்கு உலகும் ஓருலகாக வாய்ப்பு உண்டாயிற்று. இவ்விணைப்பு இல்லையேல் ஆப்பிரிக்காக் கரை முழுமையும் சுற்றியே மேற்குலகும், கிழக்குலகும் தொடர்பு கொண்டாக வேண்டும்.

அமெரிக்காவின் வடதென் பகுதிகளும் உலகை இரண்டாகப் பிரித்து வடகோடி வடகடலுடனும், தென்கோடி தென்கடலுடனும் பொருந்திக் கிடக்கின்றன. ஆதலால் வடமெரிக்கா தென்னமெரிக் காக்களை இணைக்கும் பனாமா நில இடுக்கை வெட்டிக் கடல் இணைப்பாக்கியமையால்தான் மேற்கு கிழக்கு உலகங்கள்

-