உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 29.pdf/91

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

80

இளங்குமரனார் தமிழ்வளம் - 29

ஓருலகாக வழி உண்டாயிற்று. இவ்விணைப்பு இல்லையேல் தென்அமெரிக்கக் கரை முழுமையும் சுற்றியே ஆகவேண்டும்.

சூயசு, பனாமாக் பனாமாக் கடல் கடல் இணைப்புத் திட்டங்கள் பல்லாயிரக்கணக்கான கல் தொலைவையும், பலநாட் பயணத்தையும், பெரும் பணச்செலவையும், பெருகிய அல்லல் களையும் குறைத்துவிட்டன. அன்றியும் உலகைப் பிணைத்து, வாணிக வளமும், தொழில் வளமும் பெருகச் செய்துள்ளன. இத்தகைய செயற்கரிய செயல்களே “ஓருலகச் சாதனைகள்” என்று கூறத்தகும். வாழ்க உலக ஒருமைப்பாடு!