88
இளங்குமரனார் தமிழ் வளம் – 3
பதற்கு உண்டு என்பது வடமொழியிற் கூறப்படினும்; காத்த லெனப் பொருள்படும் 'ஓம்பு' என்னும் முதனிலை தமிழின் கட் காணப்படுதல் போல வடமொழியிற் காணப்படாமை யானும், ஓங்காரம் தமிழிற்கே பண்டுதொட்டு உரிமையுடைய தென்பது பெற்றாம்.
(திருவாசக விரிவுரை. மறைமலை. பக். 60-61)
ஓர்ப்பு: ஓர்ப்பு என்பது ஒரு பொருளை ஆராய்ந்து (இறையனார். 2. நச்.)
உணர்தல் என்பது.
ஓரி: ஓரி என்பது தேன் முதிர்ந்தாற் பரக்கும் நீல நிறம்.
(புறம். 109. ப.உ)
ஓரை: (1) பஞ்சாய்ப் பாவைகொண்டு மகளிர் ஆடும் விளையாட்டு. (நற்றிணை. 68. அ. நாராயண.) (2) ஓரை என்னுஞ் சொல் கிரேக்க மொழியைச் சார்ந்த தென்றும் வடமொழி வழியாகத் தமிழிற் புகுந்ததென்றும் கூறுவர். (தமிழ்ச் சுடர்மணிகள். பக். 39)
(3) ஓரை என்னும் சொல் விளையாட்டு என்னும் பொரு ளில் வழங்கும் தனித் தமிழ்ச் சொல்லாகும். 'கோதை ஆயமொடு ஓரை தழீஇ' (அகம். 49) எனவும், ‘ஓரை ஆயம்' (அகம். 219), (குறுந். 48.) எனவும், ஓரை மகளிர்' (குறுந். 401) எனவும், ‘ஓரை ஆயத்து ஒண்டொடி மகளிர்' (புறம். 176) எனவும், 'விளையாடு ஆயத்து ஓரை ஆடாது’ (நற்.2) எனவும், ஓரை என்னுஞ் சொல் விளையாட்டு என்னும் பொருளில் பயின்று வழங்கியுள்ளது.... விளையாட்டென்னும் பொருளினதாகிய ஓரை என்னும்
இத்தமிழ்ச் சொல்லுக்குப் பிற்காலத்தவராகிய உரையா சிரியர்கள் முகூர்த்தமெனப் பிறழ உரை கூறியுள்ளார்கள். 'ஓரை' என்னும் பழந்தமிழ்ச் சொல்லுக்குரிய பொருள் இது வென உணராத ஆராய்சிசியாளர் சிலர், ஹோரா என்ற யவன மொழியே வடமொழி வழியாகத் தமிழிற் புகுந்து ஓரை யெனத் திரிந்ததெனப் பிழைபடக் கருதியதோடு அன்றி அக் கருத்தினை அடிப்படையாகக்கொண்டு ஓரை என்னுஞ் சொல்லை வழங்கிய தொல்காப்பியம் பிற்காலத்து நூலோ என மற்றொரு பிழைபட்ட முடிவினையும் வெளியிடு
வாராயினர்.
(தமிழிலக்கிய வரலாறு. தொல்காப்பியம். 125-126)