உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 3.pdf/106

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

B

கங்கு: நெருப்போடு கூடிய கரிக்கட்டி. இதற்குப் பொருள் எவ்வகராதியிலும் இல்லை. இச்சொல்லை எடுத்தாண்டவர் களும் பொரும்பாலும் கிடையாது. ஆனால் அணுக்க காலத்தில் ஒரு நூலில், "மனமே நீ தீண்டக் கூடாத தீக் கங்கு என்று பயந்தவள், மகிழ்ந்து 6 வனைந்து கொள்ளும் மாணிக்க மாயுள்ளாள்” என உயர்திரு. வெ. ப. சுப்பிரமணிய முதலியார் எடுத்தாண்டிருக்கின்றார். (செந்தமிழ்ச் செல்வி. 19:273-3.)

கச்சம், தேவகோடி: கச்சம், தேவகோடி என்பன சில எண்ணுப் பெயர்கள். (சீவக. 2219. நச்.) கச்சை: ஆடை நெகிழாமல் இருக்கக் கட்டிக் கொள்ளும் சுற்றுப்பட்டை. (குறிஞ்சிப்பாட்டு விளக்கம். 70.)

கட்டாயம்: ஒன்றைக் கண்டிப்பாய்ச் செய்து தீரவேண்டு வதைக் கட்டாயம் என்பர். கட்டவேண்டிய ஆயம் கட்டாயம். கட்டுதல், செலுத்துதல்; ஆயம், வரி, வரிகட்டுவது பொதுவாக மக்கள் விரும்பாததும் தவறாது செய்ய வேண்டுவதுமான காரியம் வரிகட்டுவது போன்ற கண்டிப்பு கட்டாயம்.

(சொல். கட்: 15)

கட்டு: (1) கட்டாவது முறத்திலே நெல்லை இட்டுக் குறிசொல்லுதல். (அகம். 98. வேங்கடவிளக்கு)

(2) சேரியின் முதுபெண்டாகிக் குறி சொல்லு மாதரை மனையகத்துக் கொணர்ந்து வைத்து முறத்திலே பிடி நெல்லை யிட்டு எதிரே தலைமகளை நிறுத்தித் தெய்வத்துக்குப் பிரப் பிட்டு வழிபாடு செய்து அந்நெல்லை நந்நான்காக எண்ணி எஞ்சியவை ஒன்றிரண்டு மூன்றளவும் முருகணங்கெனவும், நான்காயின் பிறிதொரு நோயெனவும் கூறப்படுவது. முருகணங்கு என்று கூறின் உடனே வேலனை (முருகனுக்குப் பூசை நடத்தும் பூசாரியை) அழைத்து வெறிக்களந்திருத்தி முருக வேளுக்குச் சிறப்பெடுத்து ஆண்டுக் கழங்குக் குறிப்பார்ப்பது. (கழங்கு காண்க)

(நற்றிணை. 288. அ. நாராயண.)