உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 3.pdf/107

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

90

3

இளங்குமரனார் தமிழ் வளம் – 3

கட்டுரை: பொருள் பொதிந்த சொல்; உறுதியை உடை u சொல்லும் ஆம். (சிலப் - பதிகம்: 54. அடியார்.)

கடகம்: கங்கணம், தொடி, வளை; இவ்வணிகலன் ஆண் மக்களும் அணிதல் உண்டு என்பது “கண்ணெரி தவழ வண்கை மணி நகு கடகம் ஏற்றா” என்னும் சீவக சிந்தாமணிச் செய்யு ளிலும் காண்க. (முல்லை. ஆரா. :74.)

கடமை: கடமையைக் காப்பது என்பது கடுமைதான். கடுமை என்னும் சொல்லில் இருந்து கடமை என்பது தோன்றிய வகையில் இருந்தே ஈது அறியப்படும். (திருக்குறள் அறம் 81)

கடல்: கடல் என்னுஞ் சொல், கட்பார்வையினைக் கடந்து நிற்பது என்னும் பொருளைத் தரும். கடலினது எல்லை அதனை நோக்குவாரது கண்ணுக்குப் புலனாகாமையின் அஃது அங் ஙனம் பெயர் பெறலாயிற்று.

இனிக், கடலானது எந்நேரமும் பேர் இரைச்சல் இடுவது பற்றி 'ஆர்கலி' 'நரலை” 'குரவை' ‘அழுவம்' என்றும், பரந் திருப்பது பற்றிப் ‘பரவை' என்றும், ஆழ்ந்திருப்பது பற்றி ‘ஆழி' என்றும், உப்பு நீர் உடைமை பற்றி ‘அளக்கர்’ ‘பௌவம்’ ‘உவரி’ என்றும், மழை முகிலே உண்டாக்குதல் பற்றிக் ‘கார்கோள்’ என்றும், மழைநீர் ஆற்றுநீர் ஊற்றுநீர் மூன்றுக்கும் காரண மாதல் பற்றி 'முந்நீர்' என்றும் பல சொற்களால் வழங்கப் படுகின்றது. (சிறுவர்க்கான செந்தமிழ். 27)

கடவுள்: (1) கடவுள் என்னும் சொல்லைக் கேட்ட அள வானே அஃது எப்பொருளையும் கடந்து நிற்பது என்னும் பொருள் புலனாகா நின்றது. இனிக் கடவுள் எப்பொருளைக் கடந்து நிற்கின்றார் என்று ஆராய்ந்து பார்க்குமிடத்து இவ் வுலகத்தையும், இவ்வுலகத்தில் வாழும் உயிர்களையும் கடந்து நிற்கின்றார் என்றே நாம் சொல்லுதல் வேண்டும்.

(கடவுள் நிலைக்குமாறான கொள்கைகள் சைவம் ஆகா: 4)

(2) உலகத்துப் பொருள்கள் எதனுள்ளும் அப்பொருள் களைப் பற்றிய நினைவுகள் எதனுள்ளும் கடவுள் அடங்காமல் அவற்றை யெல்லாம் அவர் கடந்து நிற்பவர் என்பதே எல்லா மக்கட்கும் உடன்பாடான பொது உண்மையாம்.

கடத்தல் என்பதை மூன்று வகையாகப் பாகுபடுத்தல் வேண்டும். அவை இடத்தைக் கடப்பதும், காலத்தைக் கடப் பதும், பொருட்டன்மைகளைக் கடப்பதும் என்பனவாம். அவற்