சொற்பொருள் நுண்மைவிளக்கம்
91
றுள் டத்தைக் கடப்பதாவது பொருள்கள் எல்லாம் இருக்கும் எல்லா இடத்தையும் கடந்து நிற்பதேயாம்.
(3) காலத்தைக் கடந்தவர் என்பது முக்காலத்தையும் கடந்து நிற்பவர் என்பதேயாம்.
பொருள்களின் தன்மையைக் கடந்தவர் என்பது அவ்வப் பொருள்களின் இயல்புகளிலும் தம்மியல்பு அடங்காமல் அவ் வெல்லாவற்றின் இயல்புகளையும் முற்றுங் கடந்து நிற்பவர் என்பதேயாம்.
(கடவுள் நிலைக்கு மாறான கொள்கைகள் சைவம் ஆகா. 8–19)
கடு, கடுகு: வடமொழியில் காரத்தையும் கொடுமையையும் குறிப்பனவாம். அங்குக் ‘கட்’ என்னும் பகுதி ‘போ' என்னும் பொருளது. தமிழில் ‘கடு' என்பது மிகுதி முதலான பலபொருள் உடையது. வடமொழி அறிஞர் சிலர் ‘கிரிட்’ பகுதி என்றும் ‘வெட்டு' என்பது பொருள் என்றும் கருதுவர். எனினும் அதுவும் பொருந்தாததே. திராவிட மொழிகளில் ‘கடு’ என்னும் பகுதியில் இருந்து பிறந்த சொற்கள் மிகப் பலவாகவும் நேரிய பொருள் உடையனவாகவும் இருத்தலாலும், வடமொழியில் இதற்கு இனச் சொல் இன்மையாலும், இதனைத் திராவிடச் சொல் என்றே கொள்ளலாம். (கடுகு, கடி, கடுகடுத்தல், கடறு என்னும் தமிழ்ச் சொற்களையும் நோக்குக.) (மு. வ. மொழிவரலாறு. 113.) கடுக்கை: கடுக்கை கொன்றை. "இணர்ததை கடுக்கை ஈண்டிய தாதில்" அகம் 393. 'ஒல்கு நிலைக் கடுக்கை அல்கு நிழல் அசைஇ” - அகம் 399. மேற் காட்டிய அகப் பாடல்களில் கடுக்கை என்றே கொன்றை அழைக்கப்படுகிறது. கடுக்கன் என்று காதில் அணியும் அணி ஒன்றுளது. அது கொன்றையின் மலரும் பருவத்து அரும்புபோல் இருப்பதால் கடுக்கை ‘கடுக்கன்’ ஆனதாகத் தெரிகிறது. ஓலை, குழை என்ற செடிகளின் பாகங்கள் அணிகளுக்குப் பின்னால் பெயர் பெற்றவகை தெரிந்ததே.
-
(சங்க இலக்கியத்தில் செடி கொடி விளக்கம். 109.) கடுஞ்சூல்: முதற்கரு. “நின்னயந் துறைவி கடுஞ்சூற் சிறுவன்” (ஐங்குறு:309) என்பது காண்க. (அகம். 78. வேங்கடவிளக்கு)
கடுத்தல்: மிகுதல், கடி என்னும் உரிச்சொல் ஈறு திரிந்தது (குறுந்தொகை 136.உ. வே.சா.)
(குறள் 706 பரிமேல்)