சொற்பொருள் நுண்மைவிளக்கம்
95
கந்தழி: (1) கந்தழி என்ற சொல் பற்றிலான், சுட்டிறந்தவன் என்னும் பொருளையுடையது, கந்து என்பது முதலில் தறி என்பதை உணர்த்திப் பின் பற்றும் ஒரு பொருளைக் குறிப்ப தாய்ப் பின் பற்றுக்கோடாக உள்ளதை உருவகிக்கப் பயன் பட்டது. ‘பழமை கந்தாக' என்ற இடத்து அப்பொருள் காண்க. கடவுளை வணங்கும் நிலையத்திற்கும் அப்பெயர் வருவதைக் "கந்துடை நிலை" யினும், “கலிகெழு கந்தக் கடவுள் கைவிட’ என்ற விடத்தும் காண்க. (செந்தமிழ்ச் செல்வி. சிலம்பு. 2:58)
(2) கந்தழி என்றது தீப்பிழம்பினையேயாம். அஃது அப் பொருள் தருமாறு யாங்ஙனம் எனிற், ‘கந்து’ எனுஞ் சொல் 'பற்றுக்கோடு' என்னும் பொருட்டாதல் “மறங்கந்தாக நல்லமர் வீழ்ந்த" (புறநானூறு. 93.) என்பதனாலும் அதன் உரையாலும் அறியப்படும். அழி என்பது அழிப்பது; எனவே கந்தழி என்பது 'தான் கொண்ட பற்றுக்கோட்டினைத் தானே அழிப்பது என்னும் பொருள் தருவதாகும்,. இனித், தீயானது தான் பற்றிய விறகினையும், திரி நெய்யினையும் அழித்து விடுதல் எவரும் அறிந்ததேயாம். அதனால் ‘கந்தழி' என்பது தீப்பிழம்பே ஆயிற்று. (செந்தமிழ்ச் செல்வி. சிலம்பு. 5; 78)
(பட்டினப். 249. நச்)
கந்து: தெய்வம் உறையும் தறி. கப்பணம்: இரும்பால் ஆனை நெருஞ்சி முள்ளாகப் (சீவக. 285. நச்.)
பண்ணியது.
கயந்தலை: யானையின் தலையைக் ‘கயந்தலை' என்று சங்க நூல்கள் குறிப்பிடுகின்றன. யானையின் கன்றையும் கயந் தலை என்று கூறுவது தொல்காப்பியத்தில் காணப்படுவது...... யானையின் தலை மிகப் பெரியதாகினும் உள்ளே கடற்பஞ்சு போன்று மெல்லிய எலும்புகளும் வறிதான அறைகளும் உள்ள தாகலின் இதன் தலை மிக மென்மையானது. யானையின் பெரிய தலை கனமானதாக இருந்தால் அதன் தலையைத் தூக்கவோ அசைக்கவோ முடியாதென்று விலங்கு நூலார் கூறுவர். சங்க லக்கியத்தில் யானைக் குட்டியின் தலை மிக மெல்லியது என்று கருதிக் கயந்தலை என்றழைத்தனர். கயமுனி, கயமுனிக் குழவி' என்றும் அழைத்தனர். கயவென்ற சொல் மென்மை என்ற பொருள் தரும் என்று தொல்காப்பியம் கூறும்.
(சங்க இலக்கியத்தில் விலங்கின விளக்கம்: 286287)
கரடி: கரடி என்ற பிற்காலச் சொல் அது வாழும் இடத்தை அடிப்படையாகக் கொண்டு வழங்கிய பெயராகத் தோன்று
வ