96
Ꮒ
இளங்குமரனார் தமிழ் வளம் – 3 3
கின்றது. கரடு என்ற சொல் பாறைகளும் பெருங்கற்களும் நிறைந்த வறட்சியான நிலத்திற்கு வழங்கும். அத்தகைய கரடு நிலத்தில் வாழும் விலங்கை, கரடு நிலத்திற்கு உரியதாகக் கருதிய விலங்கைக் கரடி எனப் பெயரிட்டழைத்ததாகத் தெரிகின்றது.
(சங்க இலக்கியத்தில் விலங்கின விளக்கம்: 213.)
கரடிகை: கரடி கத்தினாற் போலும் ஓசையை உடைத்து ஆதலால் கரடிகை என்று பெயராயிற்று.
(சிலப். 3: 26. அடியார்.)
கரணம்: கன்னிமை கழியாக் குமரியொடு, கன்னிமை அகன்ற இளமனைவிக்குத் தோற்றரவில் பண்டு எவ்வேறு பாடும் இல்லை. இவ்வேமாற்ற நிலையைப் 'பொய்' எனத் தொல்காப்பியர் குறிப்பர். புறவேறுபாடின்மை பலர்க்கு மயக்கம் செய்தலின் பொய் எனப்பட்டது. மண அடையாளம் இல்லா மனைவியை இளந்தோற்றத்தால் குமரி எனக் கொண்டு உள்ளம் போக்கிய நல்லிளைஞன், அவளை நோக்கவும், களிக்கவும், உரையாடவும், செயல் காணவும் முற்படுவான். ஏமாறு தோற்றத் தால் மேற்கொள்ளும் இக்காதல் முயற்சிகளை வழு எனத் தொல்காப்பியர் குறிப்பர். மேற்கூறிய பொய்யும் வழுவும் தோன்றிய பிற்பாடே சமுதாயத்தின் திருமணமுறைக் குறை பாடு இனச் சான்றோர்கட்குப் புலனாயிற்று. வழுவிற்குக் காரணம் பொய், வழுவகல வேண்டின் பொய் அகல வேண்டும். மணப்பக்குவம் எய்தியிருக்கும் பெண்ணுக்கும், பக்குவம் வந்து மணம் எய்திய பெண்ணுக்கும் புறத்தோற்றத்தில் யாரும் காண அடை அடையாளம் வேண்டும் என்று சான்றோர்கட்குப் பட்டது. வேறுபாடு காட்டும் கரணம் சடங்கு வகுத்தனர். காலிற் கிடந்த சிலம்பை அகற்றுவது ஒரு கரணம், கூந்தல் மேல் மலரணிவது ஒரு கரணம். இவ்விரண்டும் பண்டைத் திருமணக் காலத்துப் பரவலாக வழக்கில் இருந்த காரணங் ங் கள் என்று தெளிகின்றோம். (தமிழ்க்காதல். 150- 165.)
-
கராம்: கராம் - முதலையுள் ஒருசாதி.
-
(புறம். 37. ப.உ) கரு: கரு கருப்பு - கருப்பம். மேகம் சூல் கொண்ட போது கருத்திருத்தலால் சூல் கருவெனப்பட்டது.
-
(புறநானூற்றுச் சொற்பொழிவுகள். 351.)
(தொல். பொருள். 260. பேரா.)
கருதல்: கருதல் என்பது மறந்ததனை நினைத்தல்.