சொற்பொருள் நுண்மைவிளக்கம் ஓ
97
கரும்பு: கரும்பு என்பது கரும் பயிர் என்பதன் மரூஉவே. (திருக்குறள் மணிவிளக்கவுரை. I. 396)
கருமமாராயம்: அரச காரியங்களை முட்டின்றி நடத்துபவர். (முதற் குலோத்துங்க சோழன். 85.)
கருவி: செயப்படு பொருட்கண் உய்ப்பது.
கருவியாவது வினைமுதற்றொழிற் பயனைச் (தொல். சொல்: 73. சேனா.)
கரைதல்: பழந்தமிழில் கரைதல் என்றால் அழைத்தல் காக்கை தன் இனத்தை அழைத்துக் கலந்துண்ணும் தன்மையைத் திருவள்ளுவர் கூறுகின்றார். கரை என்ற சொல் மற்றொரு பெயரிலும் ஆளப்பட்டுள்ளது. கடலிற் செல்லும் கப்பல் களுக்குக் கரையிருக்கும் இடத்தைக் காட்டுவதற்காகக் கடற் கரையில் அமைக்கப்பட்டுள்ள விளைக்கைக் கலங்கரை விளக்கம் என்பர் தமிழர். சிலப்பதிகாரத்தில் கலங்கரை விளக்கம் குறிக்கப் பட்டுள்ளது. (தமிழ் விருந்து. 105.)
கல்லறை:
கல்லால் கட்டப்பட்ட அறையெல்லாம் கல்லறை என்று சொல்லுதற்குறியன என்றாலும் பிணத்தை வைத்துக் கட்டப்பட்ட அறையையே குறித்தலைக் காண்கிறோம். ஆதலின், கல்லறை என்றசொல் தன் பொருளில் சுருங்கி விட்டது.
(பழந்தமிழ். 70.)
கல்லாமை: தனக்குரிய தொழிலைக் கல்லாமை.
(மலை. 312. நச்)
கல்லால்: கற்கத் தக்கவற்றைக் கற்பிக்க இடமாக இருந்தது பற்றி அத்தரு (மரம்) கல்லால் எனும் பெயரில் கவினுறுகின்றது. (திருவருட்பா விரிவுரை. நெஞ்சறி. 58.)
கல்வி: (1) கல்வி என்பது தவம் முதலாகிய விச்சை.
(தொல் பொருள். 257. பேரா.)
(2) ‘கல்வி' என்னும் தமிழ்ச் சொல் ‘ஆழ்ந்து தெளிதல்' என்னும் உயர்ந்த கருத்தையும், 'புலமை' என்னும் தமிழ் மொழி புறத்தே காணும் உலகியற்கைகளைப் புலனறிவுகளாலும் ஆய்ந்து பயிலல் என்னும் முதிர்ந்த பொருளையும் உட்கொண்டுள்ளன.
(சங்க நூற்கட்டுரைகள். II. 65.)
கலங்கரை விளக்கம்: (1) திக்குக் குறி காட்டிக் கலத்தை (சிலப். 6: 141. அரும்பத.)
அழைக்கிற விளக்கம்.