உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 3.pdf/115

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

98

இளங்குமரனார் தமிழ் வளம் – 3

(2) நிலையறியாத ஓடுங்கலங்களை அழைத்தற்கு ட்ட (சிலப். 6: 141. அடியார்.)

விளக்கு.

கலம்: கலம் (கலன்) எங்ஙனம் நகையைக் குறித்தது என்பது இப்போது அறிய இயலவில்லை. இது, 'கல்' என்னும் ஓசை யுண்டாக்கும் சதங்கை, சிலம்பு போன்ற காலணிகளுக்கு முதலிற் பெயராகிப் பின்பு காலப் போக்கில் நகைகளுக்குப் பொதுப் பெயராய் அமைந்ததோ என்னவோ தெரியவில்லை.

(பத்துப் பாட்டு ஆராய்ச்சி. 527)

கலன்: கலன் என்பது மணிக் கற்களால் ஆனது என்னும் பொருள் உடையது. (சங்கநூற் கட்டுரைகள். I. 56,)

கலி: (1) புகழால் வரும் ஆரவாரம். தழைத்த எனினும் அமையும். (திருக்கோ. 20. பேரா.)

(2) சீர், பொருள், இசைகளால் எழுச்சியும் பொலிவும் கடுப்பும் உடைமைத்தாகலின் கலி என்பதும் காரணக்குறி. “கலித்தல், கன்றல், கஞறல், பம்மல், எழுச்சியும் பொலிவும் எய்தும் என்ப” எனவும் “கம்பலை சும்மை அழுங்கல். கலிமுழக் கென்றிவை எல்லாம் அரவப் பெயரே” எனவும் சொன்னார் ஆகலின்.

(யா. வி: 55)

கலிநடம்: கலிநடம் என்றது கழாய்க் கூத்து (கழைக் கூத்து) (சிலப். 3:12. அடியார்.)

கவ்வை: செவ்வையுடையதனைச் செவ்விது என்றாற் போலக் கவ்வையுடையதனைக் கவ்விது என்றார்.

(திருக். 1144. பரி; மணக்.)

கவரி: கவரியில் இருந்துதான் சவரி மயிர் தோன்றியது. கவரி என்ற சொல்லே சவரி ஆயிற்று. கவரி மயிரினால் செய்த சாமரம் கவரி என்று அழைக்கப்பட்டது. கவரி என்ற சொல் முதலில் அழகிய மயிர்க் கற்றையைக் குறித்துப் பின்னர் அந்த மயிர்க் கற்றையைத் தரும் விலங்கிற்குப் பெயராயிற்று.

(சங்க இலக்கியத்தில் விலங்கின விளக்கம். 463.)

-

கவலை: (1) நாற்சந்தி கூடும் இடம். (முல்லைப் - ஆரா. 67.) (2) (ஒருவகைக் கிழங்கு; கவலை வளைவு) கவலைக் கிழங்கு நிலத்தடியில் முற்றி வருங்கால் மடங்கியே வளைந்து காணப்படும். நேராக வளராது.

(சங்க இலக்கியத்தில் விலங்கின விளக்கம். 285)