சொற்பொருள் நுண்மைவிளக்கம்
99
கவளம்: ‘பவளம்' பவழமென வழங்கினாற் போலக் கவளம்' என்பதும் கவழமென வழங்கிற்று. இவ்விருசொல் வழக்காறும் திணைமாலை நூற்றைம்பதிலும் (42) வருதல் காண்க. (கலி. 80. உரை விளக்கம். இளவழ.)
கவி: ‘கவி' என்பது குரங்கைக் குறிக்கும் தமிழ்ச் சொல்லே யாகும். மனிதனைப் போன்று வடிவம் பெற்றுள்ள குரங்கு கவிழ்ந்து நடக்கின்ற காரணத்தால் ‘கவி' என்று தமிழர் அழைத் துள்ளனார். கவிதல் என்னும் சொல்லானது முதனிலைத் தொழிற்பெயர் கவி என்பதாகும். (பழந்தமிழ். 173)
கவிகை: கொடுத்தற்குக் கவிந்த கை.
(பத்துப். மலைபடு, 399. நச்)
கவைக்கோல்: கொடிற்றுக்கோல்; ஆவது படைக்கல், ட்டிகை முதலியவற்றைப் பறிக்கும் கருவி; குத்துக்கோல் என்பாரும் உளர். (சிலப். 16- 142. அடியார்.)
கழங்கு: கழற்சி வித்துப் பலவற்றை முருகன் முன் போகட்டு வேலன் (வெறியாடுபவன்) தன் தலையில் ஆடை சூடிக் கையிற் பல தலைகளிற் சிறு பைகளைக் கட்டிய கோலொன்றேந்தி அக்கோலால் கழங்கு வித்துக்களை வாரியெடுப்புழிக் குறிப்புக் காணுகின்ற ஒருவகைக் குறி. இதனை “அருஞ்சுரம்” என்ற (அகம். 195) செய்யுளான் அறிக. (நற்றிணை. 47. அ. நாராயண.)
கழறுதல்: கழறுதல் என்பது அன்புடையார்மாட்டுத் தீயன கண்டால் அவ்வன்பில் தலைப்பிரியாத சொற்களால் நெருங்குவது. (இறையனார். 3. நச்.)
கழி: கழி - நெய்தல் நிலத்து நீரோடை.
(திருவிளை. வலைவீசின. 12. ந. மு. வே)
கள்: கள் என்பது திருடு என்றும் பொருள் தருவது. இதனால் ‘கள்' என்ற பொருளை உட்கொள்ளுவதால் ஒருவன் தன்னையே திருடிக்கொள்கிறான் என்ற உயர்ந்த தத்துவப் பொருளை உட்கொண்டிருக்கிறது.
(செந்தமிழ்ச் செல்வி. சிலம்பு. 12 - 512.)
(திருக். கள்ளாமை. பரிதி.)
கள்ளாமை: (1) கள்ளாமையாவது கபடபுத்தியை விடுதல்
என்றவாறு.