இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
சொற்பொருள் நுண்மைவிளக்கம்
மாறுதல்: உரையாட்டில் மாறிமாறிச் சொல்லுதல் விள்ளுதல்: ஒன்றை வெளியிட்டுச் சொல்லுதல். விளம்புதல்: ஒன்றைப் பலர்க்கு அறிவித்தல்.
புகலுதல்: ஒன்றை விரும்பிச் சொல்லுதல்.
139
இசைத்தல்: ஒன்றைக் கோவைபட அல்லது ஒழுங்கு படச்
சொல்லுதல்.
கழறுதல்: கடிந்து சொல்லுதல்.
இயம்புதல்: இன்னிசையுடன் சொல்லுதல்.
கரைதல்: அழுது காண்டு அல்லது இரங்கிச்
சொல்லுதல்.
(உயர் தரக் கட்டுரை இலக்கணம் II, 23 – 4)
சொற்குற்றம்: சொல்லின்கண் தோன்றும் குற்றம்.
(திருக். 127. பரி.)
சொன்மலர்: சொல்மலர் எவ் விடத்துப் பெறுதும் எனின் குரவர் முதலான அரசர் சொல், 'திருவாய் மலர்ந்தார்' என்னும் வழக்கத்தால் கண்டு கொள்க.
(திருக். 650. காலிங்)